பக்கம்:உலக அறிஞர் சிந்தனைக் களஞ்சியம்.pdf/220

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ιν. 9αιρωήνω ναι/' :ί: 235 கண்டிக்கிறோம். இவற்றில் நமக்கு மன உணர்ச்சியைத் தவிர வேறு எதுவும் செலவில்லை. ா ஹாஸ்லிட் நாடக அரங்கில் வாழ்க்கையின் இன்ப ஒளியும், துக்கமும் காணப்பெறும் பொழுது என்னுள் ஆழ்ந்த தீவிரமான சிந்தனைகள் நிறைந்துவிடுகின்றன. A ஹென்றி சைல்ஸ் இயற்கை, பரம்பொருளின் செயல்களை நடித்துக் காட்டும். கலை கண்யமான உள்ளங்களுக்கு மட்டுமே ஒப்படைக்கப்பெற்றிருக்க வேண்டும் என்பது விரும்பத்தக்கது. ா கதே நாட்டுப்பற்று நாட்டுப்பற்றைவிட அதிக நெருககமான அன்பு வேறில்லை. | பிளேட்டோ ஆண்டவருக்குரிய என் கடமைக்கு அடுத்தபடி என் தாயகத்திற் குரிய அன்பும், மரியாதையும் முதன்மையானவை. டிதெள நாட்டுப்புறத்து வீடுகளும். தோட்டங்களும் துரவுகளும் கழனிகளும், ஓடைகளும், காவுகளும் கிராமப்புறத்து விளை யாட்டுகளும், எல்லாம் ஒழுக்கம் நிறைந்தவை. நகரங்களிலோ, பல்கலைக் கழகங்களிலோ அந்தப் பண்பைக் காண்பதரிது. . ஏ. பி. ஆல்காட் நாட்டுப்புறத்தில் வசிக்கும் மனிதர்கள், ஒழுக்கத்தைக் கற்பதுடன் சுதந்தர ஆசையையும் பெறுகின்றனர். அ மினாண்டர் நாட்டுப்புற வாழ்க்கை உடலுக்கு ஆரோக்கியமாயிருப்பதுடன் உள்ளத்திற்கும் உரமளிப்பதாகும். அ ருஃபினி கடவுள். நாட்டுப்புறத்தை உண்டாக்கினார் மனிதன், நகரத்தை உண்டாக்கினான். அ கெளப்பர்