உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:நேசம்.pdf/26

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

20லா. ச. ராமாமிர்தம்


இன்னமும் சரியாய்ப் பார்ப்பதற்குள், இடுப்பு மரத்து விட்டது. 'அட பாவமே! சின்னப் பையன் மாதிரியிருக்குதே!...”* 'படி சறுக்கியிருக்குமப்பா!...”* "படிதான் சறுக்கித்தோ...வீட்டிலே கோவம் பண்ணிக் இட்டு வந்து விழுந்துட்டானோ?...”* "இந்தக் காலத்துப் பசங்களை என்னன்னு சொல்றது: பிறக்கிறபோதே, சாவுக்குக்கூடப் பயப்படமாட்டேன்றாங்க. ...நெஞ்சு அவ்வளவு துணிஞ்சுபோச்சு..." "ஐயையோ...' அந்த வீறல் அங்கே இருந்த அத்தனைபேர் உள்ளத் தையும் உடலையும் ஒர் உலுக்கு உலுக்கிவிட்டது. ஏன் உலுக்காது? பெற்ற பிள்ளையை இரண்டு நாள் இரவும் பகலுமாய்த் தேடித் தேடி அலைந்து ஏற்கெனவே உள்ளம் நைந்திருக்கும் தாய், இப்போது திடீரென்று அவனைப் பிரேதமாய்க் காணுகையில், படிரென்று உ ைட யு ம் அவளுடைய இதயத்தின் விரிசலினின்று வெளிப்படும். வீறலல்லவா அது? தாயுள்ளத்தின் பிரளயமல்லவா அது! அந்த வீறலைக் கேட்டுப் பயந்து அங்கேயிருந்து வீட் டுக்கு ஓடிவந்த ஓட்டத்தில் இவனுக்கு ஏற்பட்ட படபடப்பு அடங்கவே, அரைமணி நேரமாயிற்று. சாவைப் பற்றி அவனுக்கு அவ்வளவுதான் தெரியும். திடீரென்று ஒரு பயங்கரமான எண்ணம் அவன் மனதில் பிறந்தது. பிடரி சில்லிட்டது. நடையையும் மறந்து, சற்று நேரம் அப்படியே நின்றான். அம்மா அப்படிக் கவிழ்ந்து படுத்துக்கொண்டிருந்தானே, அப்படியே செத்துப்போயிருந்தால்...?

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நேசம்.pdf/26&oldid=1403465" இலிருந்து மீள்விக்கப்பட்டது