பக்கம்:உத்திராயணம்.pdf/48

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

38 லா. ச. ராமாமிருதம்

அப்புறம் பவானி! பவானியும் நானும் காலேஜில் ஒரே வகுப்பில் படித் தோம்,

வாழ்க்கையில் அக்கட்டத்தில் எனக்கு உதவுகின்றவர் ஒருவருமில்லை. நானே ராஜா. நானே மந்திரி. அப்பா நல்ல வேலையாய் தான் போகுமுன், நான் கஷ்டப்படாத படிக்கு கொஞ்சம் சொத்து வைத்துவிட்டுப் போயிருந்தார். பிதுரார்ஜிதமும் இருந்தது. உத்தியோக வேட்டையாடும் கஷ்டமுமில்லை. எனக்கு உத்தியோகத்தில் அக்கறை யில்லை. களம்பறித்துப் படிக்காமல், என்னிஷ்டப்படி படிப் பில் பொழுதைப் போக்கிக்கொண்டிருந்தேன். அப்பொழுது தான் பவானியைச் சந்தித்தேன்.

வகுப்பில் எத்தனையோ பெண்களிருந்தார்களே, அவர் களிடம் என் புத்தி செல்லவில்ைை! ஆம், பாவணியைவிட எவ்வளவோ, அழகிகளெல்லாம் இருந்தார்கள். ஸ்வர்ணா என்று ஒருத்தி. அவள் பெயர் அவளுக்குத் தான் தகும். ஸ்வர்ணா, விக்ரஹம்தான். ஆனால் வாயைத் திறந் தாலோ, மயில் அகவுவது போலிருக்கும். ஆனால் மிஸ் பவானியோ! - *

ஒருநாள் மாலை, காலேஜ் புத்தக சாலையில், நேர மானதும் தெரியாமல், படித்துக்கொண்டிருந்தேன். என்ன புத்தகம் என்று மறந்துவிட்டது. (டாகூரின் கீதாஞ் சலியோ?) எழில் மிகுந்த நடை, வாய்விட்டு வார்த்தைகளை எழுத்துக் கூட்டுவதுபோல், நாவில் உருட்டி உருட்டி சுவைத்து, அவைகளின் சப்தத்தை அனுபவித்துக்கொண் டிருந்தேன்.

அப்பொழுது அவ்வந்திப் பொழுதினிலே, எந்த சமயத் தில் என்ன நேருமோ என்றும் இனிப்பான அச்சம் ததும்பும் அந்த இந்திரஜால வேளையிலே, கிரந்தங்களின் உயிர்களும், அவைகளை சிருஷ்டிக்க, தங்கள் இதயச்சாறை அவை

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:உத்திராயணம்.pdf/48&oldid=544137" இலிருந்து மீள்விக்கப்பட்டது