29
விளைநிலப்பரப்பை வியந்து நோக்கினர். பசுமை பாடியது. அன்னம் நாடகம் நடத்தியது. எருமை முழவாய் அழைத்தது. கொத்துக் கொத்தாகச் சந்தனம் பூசி மணந்த மலர் ஒன்று மனத்தில் இழைந்தது. அது மருதப் பூ. சந்தன நிறத்தையுடைய அப்பூவின் பெயரைச் சூட்டி விளைநிலத்தை "மருதம்" என்றனர்.
கடற்பரப்பைக் கண்டனர்: அலைகள் அழைத்தன. சுறா சுழன்றது. கடற்காகம் கரைந்தது. புன்னையும் தாழையும் கண்களைக் கவர்ந்தன. நீல நிறப் பேழையாக நீரில் மிதந்து கண்ணடித்துக் கவர்ந்த நெய்தல் பூ தான் நெஞ்சை அள்ளியது. கடற்பகுதி நிலத்திற்கு அந்நெய்தலை அணிவித்து "நெய்தல்" என்றனர்.
"முல்லை குறிஞ்சி மருதம் நெய்தலெனச் சொல்லிய முறையாற் சொல்லவுப் படுமே"51 -என்று தொல் காப்பியரைப் பாடவைத்தனர். இந்நூற்பாவில் தொல்காப்பியரது மன உணர்வின் இழையோட்டம் தெரிகின்றது. நிலத்தின் தோற்றம், வளர்ச்சி முறையில் நான்கு இயற்கை நிலங்களையும் முறைப்படுத்த வேண்டுமாயின், குறிஞ்சி, முல்லை, மருதம், நெய்தல் என்ற வரிசையில்தான் குறிக்கவேண்டும். தொல் காப்பியருக்கு மலர் உணர்வு மேலோங்கியது. மணத்திற் சிறந்த முல்லையை முதலில் வைத்தார். தேனிற் சிறந்த குறிஞ்சியை அடுத்துச் சொன்னார். நிறத்திற் சிறந்த மருதத்தை மூன்றாவதாக்கினார். உவமைக்குச் சிறந்த நெய்தலை இறுதியில் வைத்தார். 'தான் உணர்ந்து சொல்லும் முறை இது'. சான்றோர் சொல்லிய முறையொன்று உண்டு. அவ்வாறு "சொல்லிய முறையாற் சொல்லவும் படுமே" என்று நயமாகச் சொன்னார். இங்கு '"சொல்லாத முறையாற் சொல்லவும் படும்" என்று உரையாசிரியர்கள் பேச இடமும் வைத்தார். - இந்நான்கு மலர்களிலும் ஒரு வகைப்பாடு உண்டு. குறிஞ்சி புதர் புதராகப் பூக்கும் செடிப்பூ, முல்லை கொடிப்பூ, மருதம் 51 தொல் : பொருள் : 5,