பக்கம்:பிராயச்சித்தம்.pdf/103

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பிராயச்சித்தம் 97 கஸ்டமரிடம் வேலையை முடித்துக்கொண்டு அந்த கிராமத்தை விட்டுக் கிளம்புமுன் இருட்டிவிட்டது. ரயிலைப் பிடிக்க வேணுமானால், காட்டு வழியில் இருட்டில் நாலு மைல் நடந்தாகணும். இந்த அத்துவானத் தில் ராப்பொழுதுக்கு தங்குவதைத்தவிர வழியில்லை. பசி வயிற்றைப் பிராண்டிற்று. இரண்டு வாழைப்பழத்தை வாங்கி முறித்துப் போட்டுக் கொள்ளலாமா என்றால், பழம் வாங்கக் கடையிருந்தால்தானே முடியும்? இந்தக் குகதியை வளர்க்க எங்கேயெல்லாம் போக வேண்டியிருக்கிறது! எவன் காலில் எல்லாம் விழவேண்டி யிருக்கிறது. ஆனால் பெரிய ஆர்டர். தன் வீட்டில் தங்க, சாப்பிட, கஸ்டமர் பிரியமாகத் தான் அழைத்தான். கோழி பிரியாணிக்கு மனபார் யாவன்ட்டா. சால பாகலேஸ்துந்தியண்டி. மீரு ஒக்க கொஞ்சங்கா பெட்டுக்கோனி சூடண்டி! நேனு எவருதக்ர மள்ளி செப்பப்போதானன்டி! உண்மையாகவே உபசரிக்கிறானா? கேலி பண்ணுகிறானா? பிறகு அவனேதான், சாப்பாட்டுக்கும் ராத்தங்கவும் கோயில் குருக்கள் வீட்டில் ஏற்பாடு செய்தான். சாப்பாடாஅது? சாதமா அது? சோறு. குருக்கள் வீட்டுக்கு விருந்தாளி வந்தடைந்தபோது சற்று நேரம் அதிகமாகி விட்டாலும் அந்தக் குடும்பம் விருந்தாளிக்காகப் புதுச் சமையல் செய்கிற மாதிரி இல்லை. காரணம்-இல்லாத குறையா? இஷ்டமில்லையா? பி.-7