உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:ஜனனி-சிறுகதைகள்.pdf/34

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கத்தில் நுட்ப மேம்பாடு தேவை

24 * សរ. ច. ព្រោហណ៏ក្រាំ மில்லாமல், பையன் மறு வண்டிக்குப் புறப்பட்டுப் போய் விட்டான். அப்பொழுது தடைப்பட்ட சாந்தி, அப்படியும் இப்படியும் ஒத்திப் போய்க்கொண்டே வந்தது. மணமாகிப் போன பையன் மறுபடியும் வேறு எந்த விசேஷத்திற்குங்கூட வரமுடியவில்லை. அவனை ஓர் இடமும் ஸ்திரமென்றில்லாமல், அதிகாரிகள் மாற்றி மாற்றி அம்மானை ஆடிக்கொண்டிருந்தார்கள். இரண்டு மாதம், மூன்று மாதம், ஆறு மாதம். ஜனனி இப்படித்தான் புக்ககம் போகாதபடி நேர்ந்த தடங்கலைப் பாராட்டினாளோ, இல்லையோ என அவள் வெளித்தோற்றத்தில் ஒன்றும் தெரியவில்லை. முன்னைவிடப் பன்மடங்கு துடிப்பு மிடுக்குடன்தான் பொலிந்தாள். அம்மாளோ, தன்னுடன் வம்படிக்க வருவோரிடம், தன் கன்னத்தைத் தானே இழைத்துக்கொண்டு முறையிட்டுக் கொண்டாள். - “நல்ல நாளிலேயே சொல்ல வேண்டாம், அவர் செல்லம்! ஆனால் அப்பவாவது கொஞ்சத்துக்குக் கொஞ்சம் கட்டியாண்டு வந்தேன். ஐயேடி! அந்தாத்துப் பொண்ணா, அங்கே நிக்கறதடி, இங்கே நிக்கறதடி, அவாளோடெ பேசித்து, இவாளோடெ பேசித்துன்னு, நாலுபேர் வாயிலே புகுந்து புறப்படாமெ, ஏதோ கொஞ்சத்துக்குக் கொஞ்சம் கண்டிச்சு வந்தேன். ஆனால் கல்யாணம் ஆணப்புறம் இவளுக்கு வந்திருக்கிற இறுமாப்புக்குக் கேக்கனுமா? புருஷாளுக்கு அரைக் காசுன்னாலும் உத்தியோகம், பொம்மனாட்டிக்கு அம்பது வயசானாலும் புருஷன்’னு சும்மாவா சொன்னா? மஞ்சக் கயிறுன்னு ஒண்ணு கழுத்திலே ஏறிட்டாப் போறும். புருஷன் மேலே பழியைப் போட்டுட்டு என்ன அக்ரமம் வேனுமானாலும் அவாள் பண்ணலாமே. நீங்களும் நானும் வாழ்க்கைப்பட்ட நாளா இது, Dorté)"