பக்கம்:ஜனனி-சிறுகதைகள்.pdf/188

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கொட்டு மேளம் பரதேசிக் கோலம் படி தாண்டிவிட்டது. அப்புறம் அவளுக்குத் தாளவில்லை. சின்னம்மாவைக் கூப்பிட்டுச் சாய்வு நாற்காலியை எடுத்துவரச் சொன்னாள். “என்னம்மா பண்ணப்போறே?” “கீழே வரப்போறேன்; மங்களத்தையும் கூப்பிடு. பக்கத் திலே ரெண்டுபேரும் வந்து என்னைத் தாங்கிக்கோங்கோ.” திறந்த வாய்மேல் சின்னம்மா இருகைகளையும் பொத்திக் கொண்டாள். “என்னம்மா சொல்றே? ஐயா எங்களை உசிரோடெ வெப்பாரா?” “அவன் கிடக்காண்டி; இருந்திருந்து இன்னிக்கும் மாடியிலே இருப்பேனா? என்னை இதிலே வெச்சு மெதுவாக் கீழே இறக்கி அவாள்ளாம் வரத்துக்கு முன்னாலே கூடத்து உள்ளே கொண்டு போயிடுங்கோ. இரு இரு சின்னம்மா, மயிரைக் கொஞ்சம் கோதி முடிஞ்சுடு, பீரோவைத் திற அந்தக் கிளிப்பச்சையை எடு. அதுதான்-” “பட்டுப் புடைவையாம்மா?”