பக்கம்:புற்று-லா. ச. ராமாமிர்தம்.pdf/168

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

@)仔。ó。fT。 155 உத்திரவு? கீச் கீச்- காலடியில் ஒரு மீஞ்சூறு, தன் வாடையை வீசிக்கொண்டு, விழுந்தடித்து ஓடுகிறது. எல்லாம் ப்ரமையாகவே இருக்கலாம். இருந்துவிட்டும் போகட்டும். ஆனால் அந்தக் கண்களில் ஏதோ அர்த்தம், அந்த அர்த்தம் தரும் சேதி என்னை ஊடுருவுகிறது. அதன்படி, அவரை இரு கைகளிலும் வாரி எடுத்துக் கொண்டு, பூஜையறையைக் கடந்து கூடம் கடந்து முருகன் காலண்டர் ஆணியில் தொங்கும் சாவியை எடுத்துக்கொண்டு சமையலறையுள் நுழைந்து கதவைத்திறந்த உடனேயே கிணற்றடி. கிளுக் வேப்பங்கிளையிலிருந்து அர்ச்சனையில், பூக்கொத் தும், இலைகளும் கிணற்றுள் உதிர்கின்றன. சந்திரன் அப்போதுதான் உதயமாகிக் கொண்டிருக்கிறான். பகுள பஞ்சமியின் பாலச்சந்திரன். என்னைக் கவ்விக் கொண்டி ருந்த அதீத நிலை, படிப்படியாகத் தணிகிறது. காளைக்குப் பெரும் ரகளையிருக்கிறது. அவளுடன் சேர்ந்து நான் விக்ரஹத்தைத் தேட முடியாது. சாமி விவ காரம். பொய் கூடாது. அழுவாள், அமர்க்களம் பண்ணு வாள். அவர் கிணற்றுக்குத் திரும்ப விரும்பினார் என்றால், அவள் என்ன புரிந்து கொள்ளப் போகிறாள்: