பக்கம்:புற்று-லா. ச. ராமாமிர்தம்.pdf/12

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

xi சரி, இதெல்லாம் உவமை பாஷை, சமத்காரம் என்று விட்டுத் தள்ளினாலும் தெள்ளும் உண்மையென்ன? விலை கொடுத்து வாங்கிப் படிக்கும் ஆர்வம் மக்களிடமில்லை. அவர்களைப் பற்றி, அவர்களின் பெருமைகளைத் தெரிந்து கொள்வதில் ஆர்வம் இல்லை. - பின் என்ன, யாரைப் பற்றி எதைப் பற்றி எழுது கிறேன்? இந்தப் பக்கங்களிலும் இதுவரையிலும் இனி மேலும், எப்பவும் மனித குல மாண்பைத்தான் பாடு கிறேன். எனக்குத் தெரிந்ததே அதுதான். யுேம் நானும் உறவின் பரஸ்பரம் தானே. மனித பரம்பரையே! அந்தப் பரம்பரையின் பெருமையை, நீ வந்த வழியின் பெருமை, உன் பெருமையை தெரிந்து கொள் வதில், அதில் திளைப்பதில் உனக்கு ஆசையில்லையா? உன்னை ஒன்று கேட்கிறேன். இப்போது நீ எனக்கு ஆயிரம் பேர்களின் பிரதிநிதி. நீ (அட அது நீயோ, நீங்களோ?) பதிப்பாளர்களிடம் கேட்க வேண்டும்; நீங்கள் நெடுநாட்களாகத் தேடிக் கொண் டிருக்கும், ஆனால் அச்சில் இல்லாத புத்தகங்களை வெளிக் கொணர வற்புறுத்த வேண்டும். 'புத்ர எங்கே? ஜனனி என்னவாயிற்று? அதே போல் 'அலைகள்' தயா' மீனோட்டம் த்வனி' 'இதழ்கள்' 'கங்கா'" இன்னும் என்னென்ன? அஞ்சலி' என்கிற தலைப்பில், பஞ்சபூதக் கதைகளாமே! அதாவது கடைகாலப் பாத்திரங்களாக ஒரு ஒரு element ஐயும்தண்ணிர், கெருப்பு, பூமி, காற்று, ஆகாசம்-உருவகப் படுத்தித் தனித்தனிச் சோதனைக் கதைகளாமே! இவை களைப் பற்றி காங்கள் கேள்விப் பட்டிருக்கிறோமே ஒழிய