உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:என் ப்ரியமுள்ள சிநேகிதனுக்கு.pdf/26

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

2貌 லா ச. ராமாமிருதம்

வரோம்னு என்ன நிச்சயம்? நான் விவரித்துச் சொல்லமாட் டேன், நீங்கள் தாங்கமாட்டீர்கள்: புன்னகை புரிந்தான், நாக்கில் சனி என்பீர்கள்.'

தினமும் காலையில் பேப்பரைப் பிரிக்கிறோம். மொத்த மாகவும் சில்லரையாகவும் உலக முழுவதும் உயிரின் செவா வணியைப் பார்த்தால்-ஹாம், இன்று நாம் படிக்கிறோம். நாளைக்கு நாமே பேப்பரில் வந்தால் ஆச்சரியமில்லை."

கோபம் வந்து என்ன செய்வது? வாதம் அசைக்க மு:சித்து

வாழ்க்கையின் அநித்யத்தைப்பற்றி, சாஸ்திர பூர்வ மாகவும், சம்பிரதாயமாகவும், பக்தி மார்க்கமாகவும் உங்க ளுக்கு அந்த நாளில் தெரிந்ததென்றால் எங்களுக்கு இப்போ அனுபவபூர்வமாக, உங்களைவிட நன்றாகத் தெரியும். இங்கே விமானம் கடலில் விழுந்தது. அங்கே ரயிலோடு ரயில் மோதல், ஈராக் ஈரான் யுத்தம், பங்களாதேஷில் வெள்ளம், ரஷ்யாவில் பூகம்பம் கோடிக்கணக்கில் உயிர்ச் சேதம்-அப்போ யாருக்கென்று அழுவோம்? நீங்களும் நானும் பாம்பும் எந்தப் பொருட்டு?’’

சேது குரல் லேசாக நடுங்கிற்று.

எங்களுக்குத் தெரிந்தபடி, வாழ்க்கையைக் காரணி ஆள்கிறது. ஆயிரம் கைகள் கொண்டு நீங்கள் எங்களை அனைத்திாலும், அத்தோடு யாரும் போட்டி போட முடியாது."

பொட்டை லேசாக வலிக்கிறதோ? இரு விரல்களால் தேய்த்துக் கொண்டார். சேது அழகாயிருக்கான் இல்லே? சேது மூச்சுப் பிடிச்சு இத்தனை நாழி பேசி எனக்கு ஞாபக மில்லே. *; -జి இடிந்துபோயிருக்கும். எல்லாரும் இறந்து போயிருப்பார்கள். ஆனால் கல்லையும் மண்ணையும்

- * • - -- - s: ; : وحسخ. தோண்டி எடுத்தால், வீட்டின் குழந்தை ஒரு சிராய்ப்புக்