உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பாடகி.pdf/97

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

"துறவு கொள்கிறவர்களெல்லாம் அதன் மீது ள் ள பற்றினலா அப்படி மாறுகிறார்கள்: ஒவ்வொருவருக்கும் ஒவ் வொரு காரணம்! என் அண்ணனுக்கு என்ன காரணமோ? என்றாள் டாக்டர்.

‘இப்போது அவர் எங்கிருக்கிறார்?”

“அவர் போ த ரா கி இரண்டாண்டுகளாகி விட்டன. மிஷனில் அவருக்கு நல்ல பெயர். இப்போது அவர் சென்னையில் சாந்தோம் கோயிலில் இருக்கிறார்’ என்றாள் டாக்டர். -

‘ஏன் நாச்சியார், நீ சென்னைக்குப் போயிருக்கிருயா?”

‘நான் பிறந்தது, வளர்ந்ததே அங்குதானே!’ என்றாள் நாச்சியார்.

இப்படி பேசிக்கொண்டிருக்கும் போதே டாக்டர் கோகிலா ஒரு போட்டோ ஆல்பத்தைக் கொண்டு வந்து மேஜையில் வைத்தாள்.

“இதில் எங்கள் குடும்பமே இருக்கிறது. புரட்டிப்பார்த்துக் கொள்!” என்றாள் டாக்டர்.

நாச்சியார் முக மலர்ச்சியோடு ஒவ்வொரு தாளாகப் புரட்டினள். டாக்டரின் வயோதிகப் பெற்றாேர்கள் புதிய மணத் தம்பதிகளைப் போல எடுத்த படம் முதல் தாளில் இருந்தது. அந்தப்படத்தைப் பார்த்ததும் இருவரும் பூரித்துப் போனர்கள். ..

“நாச்சியார் இவர்கள் இப்படியேதான் பழகுகிறார்கள். “லவ் பேர்ட்ஸ்’ மாதிரி ஒன்றாகத்தான் உலாவப் போவார்கள். ஒன்றாகத்தான் படத்திற்குப்போவார்கள். வாழ்நாள் முழுவதும் லேப் பார்ட்னராக இருப்பது சாதாரணக் காரியமா? உயிருக்கு உயிரான நண்பர்களே இரண்டாண்டு சேர்ந்து கூட்டு வியா பாரம் செய்ய முடியாத காலமல்லவா இது! இந்தக் காலத்தில்

96

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பாடகி.pdf/97&oldid=699037" இலிருந்து மீள்விக்கப்பட்டது