உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மலருக்கு மது ஊட்டிய வண்டு.pdf/9

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கே.பி.நீலமணி

7

கே. பி. நீலமணி 7

பட்டுப் புடவை சரசரக்க அவள் கீழிறங்கிச் செல்லும் போது, பொற் பதுமையொன்று உயிர் பெற்று மெல்ல நடந்து செல்வது போலிருந்தது.

பாகவதர் மெல்ல மனத்திற்குள்ளேயே சிரித்தக் கொண்டார். குழந்தையின் மழலையைப் போல், கொஞ்சிக் கொஞ்சிப் பேசும் சோபியாவின் தமிழைக் கேட்டு மட்டுமல்ல; வெள்ளைக்காரப் பெண்ணுக்கு இந்த இந்தியப் புடவையும், குங்குமப் பொட்டும் என்ன மாய்த்தான் மெருகூட்டுகிறது என்பதை நினைத்து மட்டு மல்ல, தன்னிடம் வித்தை கற்றுக் கொண்டு குறுகிய காலத்திற்குள் நாடே வியக்கும் வண்ணம், பேரும் புகழும் பெற்று விட்டாளே; ஆயினும் துளிக்கூடக் கர்வம் இல்லையே என்பதையும் எண்ணித்தான் அவர் வியந்து கொண்டிருந்தார்.

சோபியா சென்று வெகு நேரமான பின்பும் பாகவதர் அந்தத் திசையிலிருந்து தன் பார்வையைத் திருப்பவே இல்லை. எத்தனையோ சிஷ்யர்களை உல குக்கு அளிந்த பாகவதருக்கு, சோபியாவை சிஷ்யையாகப் பெற்றதே பாக்கியம் போல் இருந்தது. எண்ணங்கள் அவரை எங்கேயோ இழுத்துச் சென்றன.

கொஞ்சம் கீழே வற்றேளா?' மாடிப்படியின் கீழே யிருந்து கல்யாணி அம்மாள் குரல் கொடுத்தாள்.

"என்ன விசேஷம்?’’ "புதுசா யாரோ வந்திருக்கா; அன்னிக்கி புரொபசர் சடகோபன் யாரையோ அனுப்பரதாச் சொல்லிட்டுப் போனாரே, அவா போலேருக்கு.’’

பாகவதருக்கு சட்டென்று ஞாபகம் வந்துவிட்டது. சடகோபனிடம் வந்து, முறையாகத் தமிழ் கற்றுக் கொண்டு போன இரண்டு அமெரிக்கர்களும் இந்தத்