பக்கம்:உழைப்பால் உயர்ந்த ஒருவர்.pdf/48

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

46

உழைப்பால் உயர்ந்த ஒருவர்

வாஷிங்குடனிலிருந்து புக்கர் வாஷிங்குடன் மீண்டதும் சார்லெஸ்டன் (Charleston) என்ற ஊரிலுள்ள வெள்ளையர் குழுவினர் அவருக்கு ஒரு விண்ணப்பஞ் செய்துகொண்டனர்; சார்லெஸ்டன் என்ற ஊரே மேல வர்ஜீனியாப் பகுதியின் தலைநகராக மாற்றப்பட வேண்டும் என்பதற்கு வேண்டிய ஆதாரங்களைக் காட்டிப் பேசுமாறு புக்கரை வேண்டிற்று அவ்விண்ணப்பம். அவ்வூரும் மால்டனிலிருந்து ஐந்து கல் தூரத்தில் இருந்தது. அவர் இசைந்து நாடெங்கும் சுற்றிப் பல இடங் களிற் சொற்பொழிவு ஆற்றினர். சார்லெஸ்டனத் தலை நகராகச் செய்வதா, அன்றி வேறு இரண்டு ஊர்களில் ஒன்றைத் தலைநகராகச் செய்வதா என்பது கேள்வி. முடிவில், சார்லெஸ்டனே வெற்றி பெற்றது. புக்கர் பல ஊர்களிற் பேசிய திறத்தைக் கண்டு மெச்சிய பலர், அவரை அரசியல் வாழ்க்கையிற் புகுமாறு பன்முறை வேண்டிக்கொண்டனர். ஆனல், அவர் அதற்கு இசைந்தாரல்லர். அவருடைய நோக்கமெல்லாம் தம் இனத்தாரை உயர்த்த வேண்டும் என்பதே. ஆகலின், தாம் மாத்திரம் வெற்றிபெற்று மிளிரக்கூடிய ஒரு வாழ்க்கையில் தம் நலங்கருதி ஈடுபட அவர் இசையவில்லை. அரசியல் வாழ்க்கையில் தாம் வெற்றி அடையக்கூடும் என்பது அவரும் உணர்ந்ததே எனினும், தமது இனத் தாருக்குச் செய்ய வேண்டிய கடமையை நினைத்துப்