உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:தொல்காப்பியம் நன்னூல்-எழுத்ததிகாரம்.pdf/157

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

தொகைமரபு 147

     ஈறியன் மருங்கின் இவையிவற் றியல்பெனக் 
     கூறிய கிளவிப் பல்லா றெல்லாம் 
     மெய்த்தலைப் பட்ட வழக்கொடு சிவணி 
     ஒத்தவை யுரிய புணர்மொழி நிலையே. (தொல்.171)
   (இஃது) இவ்வோத்தின் புறனடை இ-ள்) உயிரும் பள்ளியும் இறுதியாய சொற்கள் வருமொழியோடு கூடி நடக்குமிடத்து இம்மொழிகளின் முடிபு இவையெனக்கூறி முடிக்கப்பட்ட சொற்களினது விதியினால், முடியாது நின்ற பலவகை முடிபுகளெல்லாம் உண்மையைத் தலைப்பட்ட வழக்கொடு கூடிப் புணரும் மொழிகளில் நிலைமைக் கண் பொருந்தினவை யுரியவாம் எ-று.
   நில் கொற்றா. நிற் கொற்றா என்பதன்கண் நிலைமொழி திரிந்த உறழ்ச்சியும், துக் கொற்றா, துஞ்ளுெள்ளா என்னும் மிகுதியும், மண்ணு கொற்றா, மண்ணுக் கொற்றா, மன்னு கொற்றா, மன்னுக் கொற்றா உள்ளு கொற்றா எனவரும் புள்ளி யிறுதி முன்னிலைக் கிளவி உகரம் பெற்று வல்லெழுத்தோடு உறழ்தலும், பதக்க நானாழி என அளவுப் பெயர் அக்குச் சாரியை பெறுதலும், வாட்டானை தோற்றண்டை என்பன வற்றின் நெடியதன் முன்னர் ஒற்று, தகரம் வருவழிக் கெடாது இயல்பாதலும், சீரகம் அரையென்பது புணருமிடத்துச் சீரகம் என்பதன்கண் மகரவொற்றும் ககரவொற்றின்மேல் நின்ற அகர உயிரும் கெட்டுச் சீரகரை எனத்திரிதலும் ஒருமா + அரை இவ் விரண்டும் புணருமிடத்து வருமொழி அகரங்கெட்டு ஒருமாரை யென முடிதலும், கலம் அரை என இருசொல்லும் புணரு மிடத்துக் கலரை எனத் திரிந்து முடிதலும், நாகம் + அணை எனும் இருசொல்லும் புணருமிடத்து நாகம் என்பதன் ஈற்று மகரமும் அகரமும் கெட்டு நாகனையென முடிதலும் பிறவும் இப்புறனடையால் அமைவனவாம்.
     பலரறி சொன்முன் யாவர் என்னும் 
     பெயரிடை வகரங் கெடுதலும் ஏனை 
     ஒன்றறி சொன்முன் யாதென் வினாவிடை 
     ஒன்றிய வகரம் வருதலும் இரண்டும் 
     மருவின் பாத்தியிற் றிரியுமன் பயின்றே. (தொல்.172)
   இது மரூஉ முடிபு கூறுகின்றது. 
   (இ-ள்) பலரை அறியும் சொல்முன்னர் வருகின்ற யாவர் என்னும் பெயரிடத்துள்ள வகர உயிர்மெய் கெடுதலும், ஏனை