இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
குற்றியலுகரப் புணரியல் 241
(இ-ள்) நான்கென்னும் எண்ணும் ஐந்தென்னுமெண்ணும் தம்மொற்றுக்கள் நிலை திரியாது முடியும் எ-று.
(உ-ம் நானுறு, ஐந்நூறு எனவரும்.
‘மெய் என்றதனால் நானூறு என்புழி வருமொழி ஒற்றாகிய நகரக்கேடு கொள்ளப்படும் என்பர் இளம்பூரணர். நான்கு என்புழிக் குகரம் கெட நின்ற னகரம் குறிலணைவில்லா னகரமாதலின் அதனை நோக்கி வந்த வருமொழி நகரம் மயக்க விதியின்மையின் னகரமாகத் திரிந்த நிலையில் தான் கெடும் என்பதே பவணந்தி முனிவர் கொள்கை.
குறிலணை வில்லா னனக்கள் வந்த நகரந் திரிந்துழி நண்ணுங் கேடே. (நன்.210)
என்பது நன்னூல்.
ஒன்பான் முதனிலை முந்துகிளந் தற்றே முந்தை யொற்றே ளகாரம் இரட்டும் நூறென் கிளவி நகார மெய்கெட ஊஆ வாகும் இயற்கைத் தென்ப ஆயிடை வருதல் இகார ரகாரம் ஈறுமெய் கெடுத்து மகர மொற்றும். (தொல்.463)
இதுவுமது.
(இ-ள்) ஒன்பதென்னு மெண்ணின் முதனின்ற ஒகரம் மேற் பத்தென்பதனோடு புணரும்வழிக் கூறியவாறுபோல ஒரு தகரம் ஒற்றாய்வர அதன் மேலேறி முடியும். அவ்வொகரத்தின் முன்னின்ற னகரவொற்று ளகர ஒற்றாய் இரட்டித்து நிற்கும். வரு மொழியாகிய நூறு என்னும் எண்ணுப்பெயர் நகரமெய் கெட அதன் மேலேறிய ஊகாரம் ஆகாரமாம் இயல்புடைத்தென்பர். அம்மொழியிடை ஓர் இகரமும் ரகரமும் வர ஈறாகிய குற்று கரத்தினையும் அஃதேறி நின்ற றகர வொற்றினையுங் கெடுத்து ஒரு மகர வொற்று வந்து முடியும் என்பதாம்.
(உ-ம்) ஒன்பது நூறு = தொள்ளாயிரம். இவ்வாறு ஆசிரியர் ஒன்பஃது என்னும் எண்ணுப் பெயரோடு பத்து, நூறு என்னும் பெயர்களைத் தனித்தனியே புணர்த்தி முறையே தொண்ணுறு, தொள்ளாயிரம் எனத்திரித்து முடிபு கூறினாற்போல நன்னூலார் செய்கை செய்யாராயினார். எண்பஃதுடனே பத்தொன்பதும் நூறென்பதும் வந்து புணருமாயின் நிலைமொழியாய எட்டின்மேல ஒன்று
தொ.17