இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
214
தொல்காப்பியம்-நன்னூல்
தேன்மொழி மெய்வரின் இயல்பும், மென்மை மேவின் இறுதி யழிவும், வலிவரின் ஈறுபோய் வலிமெலி மிகலுமாம் இருவழி. (நன் 214)
எனவரும் சூத்திரத்தால் பவணந்தியார் தொகுத்துக் கூறினார்.
இனி, தேன்’ என்னும் இச்சொல் இறால் என்னும் வருமொழியோடு புணருமிடத்து நிலைமொழியின் னகரம் கெடாது நின்று இயல்பாய் முடிதலும், இறுதி னகரம் கெட்டவழி ஈரொற்றான தகரம் மிகப்பெறுதலும் உண்டு இம்முடிபு,
இறாஅற் றோற்றம் இயற்கை யாகும். (தொல்.343)
ஒற்றுமிகு தகரமொடு நிற்றலும் உரித்தே. (தொல்.344)
எனவரும் சூத்திரங்களாற் கூறப்பெற்றுள்ளமை காணலாம்.
‘ஒற்றுமிகு தகரம்’ என்றதனால் தகரம் ஈரொற்றாய் மிகும் என்பது புலனாம்.
(உ-ம்) தேன்+இறால் = தேத்திறால் எனவும் தேனிறால் எனவும் வரும்.
னகரவீற்று விரவுப் பெயராகிய சாத்தன், கொற்றன் முதலிய இயற்பெயர்முன்னர்த் தந்தை’ என்னும் முறைப்பெயர் வருமொழியாய் வரின், தந்தை என்னும் பெயரின் முதற்கண் நின்ற தகர ஒற்றுக்கெட அதன் மேல் ஏறிநின்ற அகரம் கெடாது நிற்கும்; நிலைமொழியாய் நின்ற இயற்பெயர் இறுதியாகிய ‘அன்’ என்பதன்கண் அகரம், தான் ஏறி நின்ற மெய்யை யொழித்து னகரத்துடன் கெட்டு முடியும் என்பர் ஆசிரியர். இம்முடியினை,
இயற்பெயர் முன்னர்த் தந்தை முறைவரின் முதற்கண் மெய்கெட அகரம் நிலையும், மெய்யொழித் தன்கெடும் அவ்வியற் பெயரே. (தொல்.347)
என்ற சூத்திரம் தெளிவாகக் குறித்தல் காணலாம்.
(உ-ம்) சாத்தன் + தந்தை = சாத்தந்தை
கொற்றன்+தந்தை = கொற்றந்தை
எனவரும். “முதற்கண் மெய்” என்றதனால், சாத்தன் றந்தை, கொற்றன்றந்தை, என்னும் இயல்பு முடிபுங் கொள்க” என்பர் இளம்பூரணர்.
முற்கூறிய இயற்பெயர்களுள், ஆதன், பூதன் என்னும் இரண்டும் நிலை மொழியாய் நின்று வருமொழியாகிய தந்தை’ என்னும் முறைப்பெயரோடு புணருங்கால், நிலைமொழி பீற்றி