உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:தொல்காப்பியம் நன்னூல்-எழுத்ததிகாரம்.pdf/214

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

204

தொல்காப்பியம்-நன்னூல்



முடியும் தாம், நாம், யாம் என்னும் பெயரும், சாரியை பெறுவன ஈறுகெட்டு இடையிலும் இறுதியிலும் சாரியை பெற்றும், நெடுமுதல் குறுகுவன நெடுமுதல் குறுகியும் உருபு புணர்ச்சிக் கண் முடிந்தவாறே முடியும் என்பதனை,

       படர்க்கைப் பெயரும் முன்னிலைப் பெயரும் 
       தொடக்கங் குறுகும் பெயர்நிலைக் கிளவியும் 
       வேற்றுமை யாயின் உருபியல் நிலையும் 
       மெல்லெழுத்து மிகுதல் ஆவயி னான.           (தொல்.320) 

என்பதனால் மாட்டெறிந்து கூறினார்.

   (உ-ம்)  எல்லாரும் + கை = எல்லார் தங்கையும்,
            எல்லிரும் +  கை = எல்லீர் துங்கையும்,

எனவும்,

       தம் + கை = தங்கை, செவி, தலை, புறம் 
       நம் + கை = நங்கை, செவி, தலை, புறம் 
       எம் + கை = எங்கை, செவி, தலை, புறம்

எனவும் வரும்.

     ‘எல்லாம் என்னும் விரவுப் பெயர், அல்வழியினும் வேற்றுமைப் பொருட் புணர்ச்சியினும் உருபு புணர்ச்சியின் இயல்பிலே நின்று வற்றுச் சாரியையும் இறுதி ‘உம்’ என்னும் சாரியையும் பெறும். அப்பெயர் வேற்றுமைப் பொருட் புணர்ச்சி யல்லாதவிடத்துச் சாரியை பெறுதல் நில்லாததாய் முடியும். எல்லாம் என்பது அல்வழிக்கண் மெல்லெழுத்து மிக்கு முடியினும் குற்றமில்லை. இவ்விதிகளை,
     அல்லது கிளப்பினும் வேற்றுமைக் கண்ணும் 
     எல்லா மெனும்பெயர் உருபியல் நிலையும் 
     வேற்றுமை யல்வழிச் சாரியை நிலையாது.     (தொல்.322) 
  
    மெல்லெழுத்து மிகினும் மான மில்லை. (தொல்.323) 

என்பவற்றால் தொல்காப்பியர் விதித்துள்ளார்.

     “உருபியல் நிலையும்” என்ற மாட்டேறு, அல்வழிக்கண் உம்முப்பெற்று நிற்றலும், பொருட் புணர்ச்சிக்கண் வற்றும் உம்மும் பெற்று நிற்றலும் உணர்த்திற்று, என்பர் நச்சினார்க் கினியர்.
     (உ-ம் எல்லாம் + குறிய = எல்லாக்குறியவும், சிறியவும், தீயவும், பெரியவும் எனவும்,