உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:தொல்காப்பியம் நன்னூல்-எழுத்ததிகாரம்.pdf/81

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

மொழிமரபு

71



உரையாசிரியர் கூறியவாறு இச்சூத்திரம் மெய் மயக்கத்திற்குப் புறனடை யென்பதே பொருந்துமென்க.

 மெய் மயக்கத்திற்கு “அவற்றுள், லளஃகான்” என்பதனைக் காட்டில் அஃதிருமொழிக் கண்னதென மறுக்க” என்பர் நச்சினார்க்கினியர். ஆசிரியர் இவ்வோத்தின்கண் ஒரு மொழி தொடர்மொழி யென்னும் வேறுபாடின்றிப் பொதுவாக மொழி யிடை யெழுத்துக்களின் இலக்கணங் கூறுகின்றாரென்பது, ஒரு மொழி புணர்மொழிகளில்வரும் குற்றியலுகர குற்றியலிகரங் களையும் ஆய்தத்தையுங் கூறுதலாற் பெறப்படுமாதலின், நச்சினார்க்கினியர் கூற்று ஆசிரியர் கருத்தன்றென்க. இம் மெய் மயக்கப் புறனடையை நன்னூலார் முதனிலை யெழுத்துக்களின் புறனடையோடு சேர்த்துக் கூறுவர்.
        ஈரொற்றுடனிலை
   யரழ வென்னு மூன்று மொற்றக் 
   க ச த ப ங் ஞ ந ம ஈரொற் றாகும். (தொல். 48) 
  மேற்கூறிய எழுத்துக்கள் மொழியாமிடத்து வேறுபட்ட மெய்களிரண்டும் ஒற்றாய் உடனிற்கும் நிலையை இச் சூத்திரத்தாற் கூறுகின்றார் ஆசிரியர்,
  இ-ள்) யரழ வென்று சொல்லப்படுகின்ற மூன்றனுள் ஒன்று ஒற்றாய் நிற்ப, அவற்றின் பின்னே க, ச, த, பக்களில் ஒன்றாதல், ங், ஞ, ந, ம க்களில் ஒற்றாதல் ஒற்றாய் வர அவை ஈரொற்றாய் நிற்கும். எ-று.

உ.ம் 8. அr, தி. L.

 ய-வேய்க்க,   வளர்ச்சி   பாய்த்தல்,   வாய்ப்பு 
 ர-பீர்க்கு,      நேர்ச்சி,   வார்த்தல்,    ஆர்ப்பு, 
 ழ-வாழ்க்கை, தாழ்ச்சி,  தாழ்த்தல்,    தாழ்ப்பு,

soft. ஞ. ந. Ls).

 ய-காய்ங்கனி, தேய்ஞ்சது,   சாய்ந்தது,   காய்ம்புறம்
 ர-நேர்ங்கல்,     நேர்ஞ்சிலை,  நேர்ந்திலை, நேர்ம்புறம் 
 ழ-தாழ்ங்குலை, தாழ்ஞ்சினை, தாழ்ந்திரள்,  வீழ்ம்படை
எனவரும்.

அவற்றுள்,

  ரகார, ழகாரங் குற்றொற் றாகா. - (தொல், 49)