உடையதாக இருக்கவேண்டும்; அதனால் சூத்திரங்களின் எண்ணிக்கை அதிகமாகப் போனாலும் பரவாயில்லை என்று நினைப்பவர். அதனால் புணரியலில் அவைகளைத் தொகுத்துக் கூறி அவைகளின் மாற்று வடிவத்தையும் அதே இயலில் விளக்கியுள்ளார். நன்னூலாருக்கு எதையும் சுருக்கமாகக் கூறவேண்டும் என்பதே கருத்து, (iii) மொழி அமைப்பில் ஏற்பட்ட மாற்றம். இது மொழி வரலாற்று மாற்றம் என்றும் கருதலாம். அத்தோடு கோட்பாட்டு மாற்றமும் சேர்ந்து இயல் மாற்றத்தையும் ஏற்படுத்தியிருக்கிறது. தொல்காப்பியர் ஏழ் என்ற எண்ணுப்பெயரைப் புள்ளி மயங்கியலிலும் ஏனைய எண்ணுப் பெயர்களைக் குற்றியலுகரப் புணரியலிலும் விளக்கியுள்ளார். இடைக்காலத்தில் அதன் வடிவம் ஏழு என்று மாறிவிட்டதால் நன்னூலார் இயல்மாற்றி உயிரீற்றுப் புணரியலில் பிற எண்ணுப்பெயர்களோடு சேர்த்து விளக்கியுள்ளார். இந்த இயல் மாற்றம் நன்னூலாரின் வருணனைக் கோட்பாட்டு மாற்றத்தையும் புலப்படுத்துகிறது. நன்னூலார் எழுத்ததிகாரத்தில் ஒலிநிலையில் குற்றியலுகர முற்றியலுகர வேறுபாடுகளை அங்கீகரித்திருந்தாலும் குற்றியலுகரத்தை முற்றியலுகரத்தின் சார்பெழுத்தாகக் கொண்டதால் உயிரீற்றுப் புணரியலிலேயே ஏழு என்பதன் மாற்று வடிவங்களை ஏனைய குற்றியலுகர எண்ணுப்பெயர்களோடு வருணித்து, குற்றியலுகர ஈற்றுக்கு ஒரு தனி இயல் அமைக்காமல் போய்விட்டார். தொல்காப்பியர் குற்றியலுகரத்தைச் சார்ந்து வருமரபின் மூன்றில் ஒன்றாகக் கருதினாலும் நூன்மரபு 1.2 புணரியல் முதல் சூத்திரத்தில் குற்றியலுகரத்தைத் தனி எழுத்தாகவே கொண்டுள்ளதால் குற்றியலுகரப் புணரியல் என்ற தனி இயல் அமைத்துள்ளார்.
அதே சமயத்தில் நன்னூலார் இடைக்காலத்தில் நடைபெற்ற எல்லா மாற்றங்களையும் ஏற்றுக்கொள்ளவில்லை. உதாரணமாகத் தொல்காப்பியர் நகர மெய்யீறாகக் கூறிய இரண்டு சொற்களில் (வெரிந், பொருந்- 79 சங்ககாலத்தில் ஒரு சொல்லே (வெரிந்) வழக்கில் இருந்து பல்லவர் காலத்திலேயே மறைந்துவிட்டது. அப்படியே தொல்காப்பியர் ஞகர மெய்யீறு ஒரு சொல்லில் மட்டுமே (உரிஞ்சு 80 வரும் என்று கூறியது வடிவ மாற்றத்தால் (உரிஞ்சு) மறைந்துவிட்டது. அதனால் வீரசோழியம் (8), நேமிநாதம் (8) ஆகிய இரண்டும் ம.ண.ன ஆகிய மூன்றுமே சொல்லுக்கு ஈற்றில் வரும் என்று வருணிக்க நன்னூல் ஞ ண ந ம ன (107) வருணித்து தொல்காப்பியத்தோடு ஒற்றுமை ஏற்படுத்தியது. பழமை போற்றுதல் ஆகும். சொல்லுக்கு முதலில் வரும் எழுத்துகளில் புதுமையைப் போற்றியவர் சொல்லுக்கு ஈற்றில் வரும் பழமையைப் போற்றிய காரணம் புரியவில்லை. பொதுவாக நன்னூலார் தனக்கு முன் எழுந்த