இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
புள்ளி மயங்கியல் 199
‘சாதி குழுஉப்பரண் கவண்பெய சிறுதி இயல்பாம் வேற்றுமைக்கு’. (நன்.21!)
எனவும்,
குயினுன் வேற்றுமைக் கண்ணும் இயல்பே. (நன்.216) னஃகான் கிளைப்பெய ரியல்பும்.... ... ... ... . ... ஆகும் வேற்றுமைப் பொருட்கே. (நன்.212) தேன்மொழி மெய்வரின் இயல்பும், (நன்.214) மரமல் எகின்மொழி இயல்பும், (நன்.215)
எனவும்,
குறில் செறியாலள அல்வழி... ... ... ... ... ... ... ... வலிவரின் இயல்பும்... ... ... ஆவன வுளபிற. (நன்.229)
எனவும் வரும் சூத்திரத் தொடர்புகளால் ஆசிரியர் பவணந்தி முனிவர் உணர்த்தியுள்ளமை காணலாம்.
இனி, மிகும் எனப்பட்டவற்றுள் தாய்’ என்னும் பெயரும், அல்வழியில் வரும் யகரவீற்றுப் பெயர்களும் மிகாது இயல்பாம் என்பது,
தாயென் கிளவி இயற்கை யாகும். (தொல்,358) அல்வழி யெல்லாம் இயல்பென மொழிப. (தொல். 361)
எனவரும் சூத்திரங்களால் உணர்த்தப்பட்டது.
(உ-ம்) தாய்கை, செவி, தலை, புறம் எனவும் தாய்கடிது, சிறிது, தீது, பெரிது
எனவும் வரும்.
அவ், இவ், உவ் என்னும் சுட்டுப் பெயர்களின் ஈற்று வகரம் இடைக்கணமும் உயிர்க்கணமும் வந்து புணரின் இயல்பாம் என்பது,
ஏனவை புணரின் இயல்பென மொழிப. (தொல்.381)
என்பதனாற் புலனாகும்.
(உ-ம்) அவ்யாழ், வட்டு அடை, எனவரும். இனி, குறுகலுந் திரிதலும் பெறுதற்கு ஏற்புடைய வற்றுள் அல்வழியில் வரும் எல்லீரும், தாம், நாம், யாம்’ எனவரும் மகாவீற்றுச் சொற்களும், தான்’, ‘யான் எனவரும் னகரவீற்றுச் சொற்களும், நூறாயிரம் தாமரை வெள்ளம் ஆம்பல் என்பன