இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
76
தொல்காப்பியம்-நன்னூல்
முற்றக்கூறிய விடத்தும் இதழ் குவியாமல் குறையக் கூறிய விடத்தும் பொருள் வேறுபடுமென நச்சினார்க்கினியர் கூறுவது கொண்டு அறியலாம். ஒற்றுங் குற்றுகரமும் ஈண்டு எழுத்தெனக் கொண்டார் ஆசிரியர் என்பது முற் கூறப்பட்டதாகலின் நச்சினார்க்கினியருரை ஆசிரியர் கருத்தன்றாம். இவ்வாறே எழுத்துக்கள் தனித்துச் சொல்லுமிடத்துப் போல மொழியாய்த் தொடருமிடத்தும் தம்மியல்பிற்றிரியாது நிற்குமென்பதனை நன்னூலார், -
மொழியாய்த் தொடரினும் முன்னனைத் தெழுத்தே. (நன். :27,
என்பதனாற் கூறினார். சங்கர நமச்சிவாயரும் “எழுத்து, கண்ணத்தின்கண் அரிசனமுதலிய போலாது மாலையின்கண் மலர்போல் அவற்றில் நிற்றலின் முன்னனைத் தென்றார்” என விளக்கி யுரைத்தார். .
போலி
அஃதாவது ஒரெழுத்தினைப்போன்று பிறவெழுத்துக்கள் நின்றொலித்தல்.
அகர விகரம் ஐகார மாகும். (தொல். 54)
(இ-ள்) அகரமும் இகரமும் கூட்டிச் சொல்ல ஐகாரம் போல விசைக்கும்.
(உ-ம் ஐவனம், அஇவனம்-எனவரும்.
அகர வுகரம் ஒளகார மாகும். (தொல், 55) (இ-ள்) அகரமும் உகரமுங் கூடி ஒளகாரம் போல விசைக்கும்.
(உ-ம்) ஒளவை, அ.உவை எனவரும்.
ஆகும் என ஆக்கச் சொற்கொடுத்து ஒதியவதனால் இவ்வொலிகள் செயற்கை என்பது உணரவைத்தார்.
அகரத் திம்பர் யகரப் புள்ளியும் ஐயெ னெடுஞ்சினை மெய்பெறத் தோன்றும். (தொல். 56)
(இ-ள்) அகரத்தின் பின் இகரமேயன்றி யகரமாகிய புள்ளியும் ஐயெனப்பட்ட நெட்டெழுத்தின் வடிவுபெறத் தோன்றும்.
(உ-ம்) ஐவனம், அய்வனம்-எனவரும். மெய்பெறத் தோன்றும் என்றதனால் அகரத்தின் பின்னர் உகரமேயன்றியும்,