இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
18
தொல்காப்பியம்-நன்னூல்
நிலையாதென்றல், நிலையிற்றும் நிலையாதும் என்றல் என இன்னோரன்ன பலவாகும். இவையெல்லாம் அடங்க,
எண்பெயர் முறைபிறப் புருவ மாத்திரை முதலீ றிடைநிலை போலி யென்றா பதம்புனர் பெனப்பன் னிருபாற் றதுவே. நன்.57)
என எழுத்திலக்கணத்தினைப் பன்னிரு பகுதியாகப் பவணந்தி முனிவர் பகுத்துக் கூறியுள்ளார்.
தொல்காப்பியர் தாம் கூறும் எழுத்திலக்கணத்தினை முறையே நூன்மரபு, மொழிமரபு, பிறப்பியல், புணரியல், தொகைமரபு, உருபியல், உயிர் மயங்கியல், புள்ளிமயங்கியல், குற்றியலுகரப் புணரியல் என ஒன்பதியல்களான் உணர்த்து கின்றார். ஆசிரியர் இப்படலத்துள் விதிக்கப் படுவனவற்றைக் கருவியுஞ் செய்கையுமென இருவகையாக்கி, அவற்றுட் கருவியை நூன்மரபு முதலிய நான்கியலானும், செய்கையைத் தொகைமரபு முதலிய ஐந்தியலானும் உணர்த்தினாரென்ப.
பவணந்தியார் தாம் கூறும் எழுத்திலக்கணத்தினை எண், பெயர், முறை, பிறப்பு, உருவம், மாத்திரை, முதனிலை, இறுதி நிலை, இடைநிலை, போலியென எழுத்தின் அகத்திலக்கணம் பத்தாகவும் பதம், புணர்ச்சியெனப் புறத்திலக்கணம் இரண்டாக வும் பன்னிரு பகுதியாகப் பிரித்து, அவற்றுள் அகத்திலக்கணம் பத்தையும் எழுத்தியலென ஒரியலாகவும், புறத்திலக்கணம் இரண்டனுள் பதத்தைப் பதவியலென ஒரியலாகவும், அப் பதத்தானாகும் புணர்ச்சியை உயிரீற்றுப் புணரியல், மெய்யீற்றுப் புணரியல், உருபு புணரியல் என முறையே மூன்றியல்களாகவும் ஒத்துமுறை வைப்பென்னும் உத்தியால் வைத்துணர்த்துகின்றார். தாம் வகுத்துக் கொண்ட ஐந்தியல்களுள் தொல்காப்பியத்து வரும் நூன்மரபு, மொழிமரபு, பிறப்பியலென்னும் மூன்றியல் களின் விதிகளை எழுத்தியலிலும், புணரியல், தொகைமரபு, உயிர் மயங்கியல், புள்ளி மயங்கியல், குற்றியலுகரப் புணரியல் என்னும் ஐந்தியல்களிலும் கூறிய விதிகளை உயிரீற்றுப் புணரியல், மெய்யீற்றுப் புணரியல் என்னும் இரண்டியல் களிலும், உருபியல் விதியை உருபு புணரியலிலும் அடக்கிக் கூறியுள்ளார். இம்முறை பவணந்தியாரது சுருங்கச்சொல்லி விளங்கவைக்குந் திறனை வெளிப் படுத்துவதாகும்.
எழுத்தின் புறத்திலக்கணமாகிய மொழியியல்பு உணர்த்தப் போந்த பவணந்தியார், முன்னைத் தமிழ்நூல்களில் இல்லன.