உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:தொல்காப்பியம் நன்னூல்-எழுத்ததிகாரம்.pdf/107

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

பிறப்பியல் 97

பிறக்குமெனக் கொண்டுசுட்டி, உந்தியிலெழுந்த காற்று மிடற் றிடத்துச் சேர்ந்த அதனாற் பிறந்த ஓசை, அண்ணத்தை யணைந்து உரலாணியிட்டாற் போலச் செறிய யகாரவொற்றுப் பிறக்கும் எனப்பொருள் கூறுவர் நச்சினார்க்கினியர்.

   இங்கெடுத்துக் காட்டிய இருவருரைகளில் முன்னவராகிய இளம்பூரணருரையினையே மேற்கொண்டு,
     அடிநா வடியன முறயத் தோன்றும். (நன். 82)

எனச் சூத்திரஞ் செய்தார் பவணந்தி முனிவர். இதன்கண் அடிநாவும் அடியண்ணமும் தம்மிற் பொருந்துதலொன்றே யகரத்தின் பிறப்பியல்பாகக் கூறப்பட்டுள்ளது. யகரத் தோற்றத்திற்கு முதற்காரணமாகிய மிடற்றுவளி இதன்கண் கூறப்படவில்லை. சுருக்க நூலாதலின் கூறாது விடுத்தார் போலும்.

     மெல்லெழுத் தாறும் பிறப்பி னாக்கஞ் 
     சொல்லிய பள்ளி நிலையின வாயினும் 
     மூக்கின் வளியிசை யாப்புறத் தோன்றும். (தொல். 100)
   இது மெல்லெழுத்திற்குச் சிறப்பு விதி கூறுகின்றது. 
   
   இ-ள்) மெல்லெழுத்துக்கள் ஆறும் தத்தம் பிறப்பினது ஆக்கஞ் சொல்லிய இடங்களிலே நிலைபெற்றனவாயினும் ஓசை கூறுங்கால் மூக்கின்கண் உளதாகிய காற்றின் ஒசையால் பொருந்தத் தோன்றும் எறு.
   ‘யாப்புற என்றதனான், இடையெழுத்திற்கு மிடற்று வளியும் வல்லெழுத்திற்குத் தலைவளியும் கொள்க என்பர் இளம்பூரணர். மெல்லெழுத்தாறுக்கும் மேல் தனித்தனியே கூறப் பட்ட நிலைக்களங்களே பிறப்பிடங்களாமெனவும் அவையாறும் மூக்குவளியால் ஒலிக்குமெனவும் தொல்காப்பியனார் பிரித்துக் கூறியுள்ளார். அங்ஙனமாகவும் பவணந்தியார் தொல்காப்பிய னார் கருத்துக்கு மாறாக மெல்லெழுத்தாறுக்கும் மூக்கையிட மாகக் கூறியிருப்பது ஆராயத்தக்கதாகும்.
     சாந்துவரி னல்லது தமக்கியல் பிலவெனத் 
     தேர்ந்து வெளிப்படுத்த ஏனை மூன்றுந் 
     தத்தஞ் சார்பிற் பிறப்பொடு சிவணி 
     ஒத்த காட்சியிற் றம்மியல் பியலும். (தொல். 101)
  இது சார்பெழுத்துக்களின் பிறப்புணர்த்துகின்றது.