இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
224
தொல்காப்பியம்-நன்னூல்
இஃது எய்தியது விலக்கிப் பிறிதுவிதி கூறுகின்றது.
குற்றியலுகரவீற்று மரப்பெயர் அம்முச்சாரியை பெறும்.
(உ-ம் தேக்கங்கோடு செதிள், தோல், பூ எனவும்
குருந்தங்கோடு செதிள், தோல், பூ எனவும் வரும்.
கமுகு + காய் = கமுகங்காய், தெங்கு + காய் = தெங்கங் காய், கம்பு + புல் - கம்பம்புல், பயறு + காய் = பயற்றங்காய் எனவருவன மரமல்லாத புல்லைக் குறித்தனவாயினும் இச் சூத்திரத்து மரப்பெயர்க்கிளவிக் குற்றியலுகரமென ஒரு வாற்றான் அடக்கப்பெற்று அம்சாரியை பெறுதல் கொள்க.
மெல்லொற்று வலியா மரப்பெயரு முளவே. (தொல், 415)
இது மென்றொடர் மொழிக்கு எய்தியது ஒரு மருங்கு மறுக்கின்றது. மேல் 14-ம் சூத்திரத்திற் கூறியவாறு மெல்லொற்று வல்லொற்றாகத் திரியாது இயல்பாய் முடியும் மென்றெடாக் குற்றுகரவீற்று மரப்பெயரும் உள என்பதாம்.
(உ-ம்) புன்கு+கோடு = புன்கங்கோடு, செதிள், தோல், பூ
குருந்து+கோடு = குருந்தங்கோடு, செதிள், தோல், பூ
எனவும் வரும்
ஈரெழுத்து மொழியும் வல்லொற்றுத் தொடரும் அம்இடை வரற்கும் உரியவை உளவே அம்மர பொழுகும் மொழிவயி னான. (தொல்,417)
இஃது ஈரெழுத்து மொழிக் குற்றியலுகரத்திற்கும் வன்றொடர் மொழிக் குற்றியலுகரத்திற்கும் எய்தாதெய்துவித்தது.
(இ-ள்) ஈரெழுத்தொருமொழிக் குற்றியலுகரமும் வல் லொற்றுத் தொடர்மொழிக் குற்றியலுகரமும் அம்முச்சாரியை இடையே வந்து முடிதற்குரியனவுமுள, அவ்விலக்கணத்தால் நடக்கும் தொழில்களிடத்து எறு.
(உ-ம்) ஏறு+கோள் = ஏறங்கோள், சூது+போர் = குதம்போர், வட்டு+போர் = வட்டம்போர், புற்று+பழஞ்சோறு = புற்றம் பழஞ்சோறு எனவரும். ‘அம்மிடை வரற்கும்’ என்புழி உம்மை எதிர்மறையாகலின் நாகுகால், கொக்குக்கால் என அம்சாரியை பெறாதனவே பெரும்பாலன என் க. ‘அம்மரபொழுகும் என்றதனால் அரசக்கன்னி, முரசக்கடிப்பு என அக்குச்சாரியையும் வல்லெழுத்தும் பெற்று முடிதலும், அரச வாழ்க்கை என அக்குச்சாரியை பெற்று முடிதலும்,