3. மெல்லெழுத்து மிகுதல்
வேற்றுமையில் வல்லெழுத்து முதன்மொழி வருமொழி பாய் வருமிடத்து மெல்லெழுத்து மிகப்பெறும் உயிரீறுகளைக் கூறவந்த தொல்காப்பியர்,
மரப்பெயர்க் கிளவி மெல்லெழுத்து மிகுமே. தொல். 237)
என அகரவீற்றிலும்,
யாமரக் கிளவியும் பிடாவுத் தளாவும் ஆமூப் பெயரும் மெல்லெழுத்து மிகுமே. (தொல்.228) மாமரக் கிளவியும் ஆவு மாவும் ஆமுப் பெயரும் அவற்றோ ரன்ன அகரம் வல்லெழுத் தவையவ ணிலையா னகரம் ஒற்றும் ஆவும் மாவும். (தொல்,231)
என ஆகார வீற்றிலும்,
உதிமரக் கிளவி மெல்லெழுத்து மிகுமே. (தொல்,243)
என இகர விற்றிலும்
ஒடுமரக் கிளவி யுதிமா வியற்றே. (தொல்.252)
என உகர வீற்றிலும்,
சேவென் மரப்பெயர் ஒடுமர வியற்றே. (தொல்.278)
என ஏகார வீற்றிலும்,
விசைமரக் கிளவியு ஞெமையு நமையும் ஆமுப் பெயரும் சேமர வியல. (தொல்.282)
என ஐகார வீற்றிலும் வரும் சூத்திரங்களால் அகர வீற்று மரப்பெயரும், ஆ, இ, உ, ஏ, ஐ ஆகியவற்றின் ஈற்றில் எடுத்தோதிய யா, பிடா, தளா, மா, உதி, ஒடு, சே, விசை, ஞெமை, நமை என்னும் மரப்பெயர்களும் வல்லெழுத்து முதன்மொழி வருமிடத்து மெல்லெழுத்து மிக்கு முடிவன எனக் குறித்துள்ளார்.
(உ-ம்) விளங்கொடு செதிள், தோல், பூ
யாஅங்கோடு " " "
பிடாஅங்கோடு " " "
தளாஅங்கோடு " " "
மாஅங்கோடு " " "
உதிங்கோடு " " "
ஒடுங்கோடு " " "
சேங்கோடு " " "