உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:தொல்காப்பியம் நன்னூல்-எழுத்ததிகாரம்.pdf/220

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

210

தொல்காப்பியம்-நன்னூல்



டகரமாய்த் திரிதலேயன்றி ஆய்தமாகவும் திரிந்து முடிவன.

இந்திரிபு

       தகரம் வரும்வழி ஆய்தம் நிலையலும்
       புகளின் றென்மனார் புலமை யோரே.     (தொல்.369)
       ஆய்த நிலையலும் வரைநிலை யின்றே 
       தகரடி வரூஉங் காலை யான.              (தொல்,399)

என வரும் இவ்விரு சூத்திரங்களாலும் முறையே விரித்துரைக்கப் பெற்றமை காணலாம்.

(உ-ம்) கல்+தீது = கஃறிது, கற்றீது எனவும்,

           முள்+ தீது = முஃடீது, முட்டீது

என வரும் வரும். இங்ஙனம் ஆய்தமாகத் திரிதற்குரியவை தனிக்குறிலின் பின்னின்ற லகர, ளகரங்கள் என்பதும், இந்திரிபு அல்வழிப் புணர்ச்சியில் தகரமுதன்மொழி வருமிடத்து நிகழும் என்பதும்,

         குறில்வழி லளத்தவ் வணையின் ஆய்தம் 
         ஆகவும் பெறுTஉம் அல்வழி யானே.         (நன்.228)

எனவரும் நன்னூற் சூத்திரத்தால் புலனாம்.

   இனி, அல்வழிக்கண் வரும் மகரவீறு, வல்லெழுத்து வருமிடத்து அதற்கேற்ற மெல்லெழுத்தாய்த் திரியும் என்பது,
      அல்வழி யெல்லாம் மெல்லெழுத் தாகும். (தொல்,314)

என்ற சூத்திரத்தாற் கூறப்பட்டது.

   (உ-ம்) மரங்குறிது, சிறிது, தீது, பெரிது எனவரும்
   லகர, ளகர வீற்றுச்சொற்கள், மெல்லெழுத்து முதன் மொழி வருமிடத்து லகரம் னகரமாகவும், ளகரம் னகரமாகவும் திரிந்து முடிவன. இவற்றின் திரிபினை,
     மெல்லெழுத் தியையின் னகார மாகும். (தொல். 367)
     மெல்லெழுத் தியையின் ணகார மாகும். (தொல். 397)

எனவரும் இவ்விரு சூத்திரங்களாலும் நிரலே குறித்தார் தொல்

காப்பியனார்.