உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:தொல்காப்பியம் நன்னூல்-எழுத்ததிகாரம்.pdf/190

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

180

தொல்காப்பியம்-நன்னூல்



என்ற சூத்திரத்தாற் பனி என்னும் நோயன்றிப் பணிக்காலத்தை உணர நின்ற வேற்றுமை முடிபுடைய பெயர்க்கு அத்தும் இன்னும் சாரியையாக வருமெனக் கூறினார். இவ்விதியை,

       வளியென வரூஉம் பூதக் கிளவியும் 
       அவ்வியல் நிலையல் செவ்வி தென்ப (தொல்.242)

எனவும்,

       மழையென் கிளவி வளியியல் நிலையும். (தொல்,287) 

எனவும் வரும் சூத்திரங்களால் முறையே வளியென்னும் சொல்லுக்கும் மழையென்னுஞ் சொல்லுக்கும் எய்துவித்தார்.

   (உ-ம்) பனியத்துக் கொண்டான், பனியிற் கொண்டான் வளியத்துக் கொண்டான், வளியிற் கொண்டான், சென்றான், தந்தான், போயினான், எனவரும்.
     புளிமரக் கிளவிக் கம்மே சாரியை.       (தொல்.244)
     எருவுஞ் செருவு மம்மொடு சிவனித் 
     திரியிட னுடைய தெரியுங் காலை 
     அம்மின் மகரம் செருவயிற் கெடுமே 
     தம்மொற்று மிகூஉம் வல்லெழுத் தியற்கை. (தொல்.250)
     பனையு மரையும் ஆவிரைக் கிளவியும் 
     நினையுங் காலை அம்மொடு சிவனும் 
     ஐயெ னிறுதி யரைவரைந்து கெடுமே 
     மெய்யவ னொழிய என்மனார் புலவர்.      (தொல்,283)

எனவருஞ் சூத்திரங்களால் முறையே புளி எனவும், எரு, செரு எனவும், பனை, அரை, ஆவிரை யெனவும் வரும் இகர உகர ஐயார வீற்றுச் சொற்கள் அம்சாரியை பெறும் என்றார்.

     (உ-ம்)   புளியங்கோடு,         செதிள்,       தோல்,        பூ
               எருவங்குழி,             சேறு,         தாது,         பூமி 
    
               செருவக்களம்,          சேனை,      தானை,      பறை 
 
               பனங்காய்,              செதிள்,      தோல்,         பூ
               அரையங்கோடு,        செதிள்,      தோல்,         பூ 
 
               ஆவிரங்கோடு,          செதிள்,      தோல்,         பூ

எனவரும்.

       நாண்முற் றோன்றுந் தொழினிலைக் கிளவிக் 
       கானிடை வருதல் ஐய மின்றே.                (தொல்.247)