பக்கம்:தொல்காப்பியம் நன்னூல்-சொல்லதிகாரம்.pdf/322

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

309 (இபள்) எற்று என்னுஞ்சொல் கழிந்தது என்னும் இரங்கற் பொருண்மையினையுடைய தாம். எ-று. இறந்த பொருண்மையாவது, ஒன்றிடத்தினின்றும் ஒன்று போயிற்று எனக் கழிந்ததற்கிரங்குதலாகிய பொருண்மை. (உ-ம்) எற்றென் னுடம்பி னெழினலம் என்புழி எற்று என்பது என்னுடம்பின் எழில்நலம் இறந்தது என இரங்குதற் பொருள்பட நின்றது. 'எற்று ஏற்றமில்லாருள் யான் ஏற்ற மில்லாதேன். என்புழியும் இதுபொழுது துணிவில்லாருள் துணிவில்லாதேன் யான், என் துணிவு இறந்தது என எற்று என்னும் இடைச்சொல் கழிந்தது என இரங்குதற் பொருள்பட வந்தமை காண்க . ஏற்றம்-துணிவு. உசு.ச. மற்றைய தென்னுங் கிளவி தானே சுட்டுநிலை யொழிய வினங்குறித் தன்றே. இது, மற்றையது என்னும் இடைச்சொல்லின் இயல்பு கூறுகின்றது. (இ-ள்) மற்றையது எனப் பெயர்க்கு முதனிலையாய் வரும் மற்றை என்னும் ஐகார வீற்று இடைச்சொல், சுட்டப்பட்டதனை ஒழித்து அதன் இனங் குறித்து நிற்கும். எ-று. ஒருவர் ஆடையொன்றைக் கொணர்ந்தவழி அவ்வாடை யினே விரும்பாதவன் மற்றையது கொணு ' என்பன். அந் நிலேயில் மற்றையது என்னுஞ்சொல் அச்சுட்டிய ஆடையை யொழித்து அதற்கினமாகிய ஆடையினைக் குறித்து நிற்றல் காண்க . மேற்றை? என்னும் ஐகாரவீற்றிடைச் சொல் பெரும்பாலும் மற்றையது, மற்றையவை, மற்றையவன் என்ருங்கு முதனிலே யாய் நின்றல்லது பொருள் விளக்காமையின் மற்றையது? என விகுதியொடு புணர்த்துக் கூறினர். சிறுபான்மை மேற்றைய டை? என விகுதியின்றித் தானேயும் வரும். இச்சூத்திரத்தை அடியொற்றியமைந்தது,