உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பஞ்ச பூதங்களின் அறிவியல் கதைகள்.pdf/105

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.
104

மோட்டியாகவும் திகழ்ந்த 31-வயதுள்ள இந்திய வீரர் ராகேஷ் சர்மாவும்; அவருடன் சோவியத் விண்வெளி வீரர்களான யூரி மாலி ஷேவ்" என்பவரும், கெனடி” என்பவருமாக 'சோயுஸ் டி-11" என்னும் விண்வெளிச் கப்பலில் சோவியத் ரஷியாவிலுள்ள "பால்கனோவர்" என்னும் விண்வெளி ஊர்தி நிலையத்திவிருந்து புறப்பட்டனர்.

இந்த விண்வெளிக் கலனைத் தொலை விண் வெளிக்கு எடுத்துச் சென்ற ராக்கெட்டின் எடை 300 டன். 164 அடி உயரம், 14-அடுக்கு மாடி களுடன் 3 கூறுகளாக அமைந்திருந்தது.

விண்வெளி நிலையத்திலிருந்து முடுக்கி விடப்பட்ட ராக்கெட், 9 நிமிடங்களில் 283 கிலோ மீட்டர் உயரத்தில் மட்ட கோள் வீதிக்கு விண்வெளிக் கலனை அனுப்பி வைத்து விட்டது.

ராகேஷ் சர்மாவும் அவரது சோவியத் நண்பர் களும் 'சல்யூட்-7 , விண்வெளிக் கலனில் தமது சிறப்பான ஆய்வுகளை; ஒருவாரம் தங்கி நிகழ்த்தி விட்டு பூமிக்குத் திரும்பினர்.

இந்த விண்வெளிப்பயண நிகழ்ச்சிக்குப் பிறகு உலக மக்கள் அனைவரையும் ஆவலோடு ஆகாயத்தை அண்ணாந்து பார்க்கவைத்த பெருமை "ஹேலி" வால் நட்சத்திரத்தையே சாரும்.