உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பஞ்ச பூதங்களின் அறிவியல் கதைகள்.pdf/22

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.
உலகநாதன் சொன்ன
பூமியின் கதை

மலாபுரத்துச் சிறுவர்கள்-அழகப்பன் உட்பட அனைவரும் குறித்த நேரத்திற்கு முன்பே மண்டபத்தில் வந்து கூடி விட்டனர்.

எல்லோருடைய கண்களும் அந்த தேவகுமாரர்களின் வருகையையே ஆவலுடன் எதிர்பார்த்து ஏங்கிக் கொண்டிருந்தன.

ஆனால்-

எங்கிருந்தோ, எப்படியோ, குறித்த நேரத்தில் அந்த ஐந்து தேவகுமாரர்களும் மண்டபத்தில் அவர்களின் கண் எதிரில் வந்து நின்றனர். அனைவரும் மகிழ்ச்சிப் பெருக்கில் ஆரவாரம் செய்து வரவேற்றனர். தேவகுமாரர்கள் ஒவ்வொருவரும், அவர்களுக்குத் தனித்தனியே வணக்கம் தெரிவித்தனர்.