இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.
49
பட்டது. இதன் கொள்ளளவு; 98,500 மில்லியன் காலன்கள்.
மைசூரில் கிருஷ்ண ராஜ சாகரம் என்னும் அணையை 250 லட்சம் ரூபாய் செலவில் 16 ஆண்டுகளில் கட்டி முடித்தனர்.
இதன் கொள்ளளவு 43, 835 மில்லியன் காலன்கள்.
ஆந்திராவிலுள்ள "நிஜாம் சாகர்” என்னும் அணைக்கட்டு ஆறு ஆண்டு காலத்தில் 366 லட்சம் ரூபாய் செலவில் கட்டி முடிக்கப்பட்டது. இதன் கொள்ளளவு 25, 566 மில்லியன் காலன்களாகும்.
இம்மாதிரி அணைக்கட்டுகள் மழைக் காலங்களில் நீரைச் சேமித்துக் கொண்டு; ஆண்டு முழுதுமான, பாசனத் தேவைக்கும், குடிநீருக்குமான நீரை வற்றாது அளித்து வருகிறது.
மற்றெல்லாவற்றையும் விடத் தண்ணிருக்குள்ள தனிப் பெருமை என்னவென்றால் - அதன் மாறுபடாத-நிலையான தனித்தன்மை தான்.
தண்ணீரல் அதிகமாகக் குளிரச் செய்தால் அந்தத் தண்ணிர் பனிக்கட்டியாக மாறி உறைந்து விடுகிறது.பஞ்ச-4