உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பஞ்ச பூதங்களின் அறிவியல் கதைகள்.pdf/42

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

41

புன்சன் என்னும் விஞ்ஞானி 1860-ம் ஆண்டு நிலக்கரி ஆவியைப் பற்றி விரிவாக ஆராய்ந்து மந்த நிலக்கரி ஆவியுடன்; காற்றையும் கலக்கவிட்டால புகையின்றி எரியுமென்றும், அதிகமான வெப்பம் தரும் என்றும் கண்டு பிடித்தார்.

மின்சாரமும், நிலக்கரியும் கிடைக்க வழி செய்த பூமி அன்னையே, மனித முயற்சியையும் முன்னேற்றத்தையும் அதன் உச்சிக்குக் கொண்டு நிறுத்த-பூமிக்குள்ளிருந்தே பெட்ரோலும், மண்எண்ணையும் கொடுத்து உதவுகிறாள்.

இன்றைய விஞ்ஞான உலகில் இப்பொருட்கள் நாகரிக முன்னேற்றத்தோடு, உலக வளர்ச்சிக்கும் - மூச்சாகத் திகழ்கின்றன என்றே கூறலாம்.

மண்ணில் மாந்தர் நல்லவண்ணம் வாழ பூமி அன்னையே அருள் பாலிக்கிறாள் என்றால் அது மிகையல்ல.

அதனால்தான் இந்த பூமியை 'பாரதமாதா' பறு தாய்க்குச் சமானமாக பாரத மக்கள் போற்றித் துதிக்கிறார்கள்.