பக்கம்:பஞ்ச பூதங்களின் அறிவியல் கதைகள்.pdf/95

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

காற்றும்; அதைத் தொடர்ந்து பேய் மழையும் அடித்துச் சொரிந்தது.

'நல்ல வேளை; எல்லோரும் நனையாமல் தப்பினோம்” என்றான் பொன்னுசாமி மகிழ்ச்சியுடன்.

காற்றும், மழையும், அதோடு பயங்கர இடியும் மின்னலும் கூடச் சேர்ந்து கொண்டது.

நேரம் செல்லச் செல்ல எல்லோர் மனதிலும் ஒருவித பயமும்; ஒருவேளை தேவகுமாரர்கள் இன்று வரமாட்டார்களோ!' என்கிற சந்தேகமும் எழுத்தது.

"தேவகுமாரர்கள் பொய் சொல்ல மாட்டாங்கன்னு சொன்னது மறந்து போச்சா"ன்னு கந்தசாமி ஞாபகப்படுத்தினான். நடுவில் அவர்கள் அமர்வதற்கான இடம் காலியாக விடப்பட்டிருந்தது.

எங்கோ ஒரு மூலையில் மின்னல் வெட்டித் தெறித்தது. மண்டபத்தைச் சுற்றி மழைநீர் ஒடை போல் வேகமாக ஒடிக் கொண்டிருந்தது. இமைக்கும் நேரத்தில் அவர்கள் ஐவரும் சிறுவர்கள் மத்தியில் தோன்றினார்கள்.

கண்ணைப் பறிப்பது போன்ற அவர்களது அழகான உடைகளில் துளி மழை நீர் கூட இல்லை.