இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.
14
எல்லாம் தேவகுமாரர்களா?” என்று வியப்புடன் கேட்டனர்.
"ஆமாம்," என்று தலையசைத்தனர் ஐவரும்.
உடனே அழகப்பன் மிகவும் தயங்கியபடி. அவர்களை நோக்கி, “புதிதாக எங்களுடன் உறவு கொள்ள ஆசைப்பட்டு வந்துள்ள என் இனிய நண்பர்களே; நான் கூறப் போவதைக் கேட்டு கோபப்படவோ; எங்களைப் பற்றித் தவறாக எண்ணவோ கூடாது. அதற்கு உறுதி கூறினால், என் மனதிலுள்ள ஒரு சந்தேகத்தைக் கூறுவேன்” என்றான்.
உடனே அந்த ஐவரும் ஒருமித்த குரலில், "நண்பனே, உன் மனதிலுள்ள சந்தேகம் எது வானாலும் தாராளமாய்க் கேட்கலாம்; அவற்றிற்கு விடை கூற நாங்கள் கடமைப் பட்டிருக்கிறோம்" என்றனர்.
உடனே அழகப்பன் தயங்காமல், உங்களை நாங்கள் எப்படி நம்புவது?" என்று கேட்டான்.
உடனே உலக நாதன், “எங்கள் கழுத்திலிருக்கும் மாலைகள் வாடாதிருப்பதால்; கொட்டுகிற இந்த மழை நீர் எங்களைத் தீண்டாதிருப்பதால்; எங்கள் இமைகள் இணையாமல் இருப்பதி