பக்கம்:நான்மணிகள்.pdf/38

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

36

நான்மணிகள்


இன்சுவையை நாக்கு சுவைத்து அறியும்; நன்மணத்தை மூக்கு மோந்து அறியும்; அணி அழகைக் கண்கள் கண்டு அறியும்; கருத்துகளை அறிஞர் எண்ணியே அறிவர். (76)

இறவாது இருந்த உயிரும் இல்லை; கெடாது இருந்த வலிமையும் இல்லை; மூவாது இருந்த இளமையும் இல்லை; குறையாது இருந்த செல்வமும் இல்லை. (77)

மக்களின் தன்மையைச் சொல்லால் அறியலாம்; ஆற்றின் பள்ளத்தை குளிர்நீரால் அறியலாம்; நல்ல நெறியை நடுநிலைமையால் அறியலாம்; கள்ளின் வெறியை தடுமாற்றத்தால் அறியலாம். (78)

நாவைக் காப்பாற்றாமல் பேசினால் நட்புக் கெடும்; நல்ல செயல்களும் கட்டாயப்படுத்தினால் கெடும்; நல்ல நூல்களைப் பயின்றால் ஆசை கெடும்; பகையைப் பெருக்கிக்கொள்வதால் வாழ்வு கெடும். (79)

கொடுக்க விரும்பினால் இல்லாதவர்க்கு உணவு கொடு; ஒன்றை விடுக்க விரும்பினால் ஆசையை விடு; எடுக்க விரும்பினால் சுற்றத்தாருள் ஏழையை எடு; எதையேனும் கெடுக்க விரும்பினால் சினத்தைக் கெடுத்துவிடு. (80)

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நான்மணிகள்.pdf/38&oldid=1379925" இலிருந்து மீள்விக்கப்பட்டது