இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை
நான்மணிக்கடிகை 35
ஊர்ந்தான் வகைய கலினமா நேர்ந்தொருவன் ஆற்றல் வகைய அறஞ்செயல் - தோட்ட குளத்தனைய துாம்பின் அகலங்கள் தத்தம் வளத்தனைய வாழ்வார் வழக்கு. (71)
ஊழியும் யாண்டெண்ணி யாத்தன யாமமும் நாழிகை யானே நடந்தன-தாழியாத் தெற்றென்றார் கண்ணே தெளிந்தனர் வெஞ்சொலா லின்புறு வார். (வெட்கென்றார் (72)
கற்றான் றளரின் எழுந்திருக்குங் கல்லாத பேதையான் வீழ்வானேற் கான்முறியும் - எல்லாம் ஒருமைத்தான் செய்த கருவி தெரிவெண்ணின் பொய்யாவித் தாகி விடும். (73)
தேவ ரனையர் புலவருந் தேவர் தமரனையர் ஒருர் உறைவார்- தமருள்ளும் பெற்றன்னர் பேணி வழிபடுவார் கற்றன்னர் - கற்றாறாரைக் காத லவர். (74)
துார்ந்தொழியும் பொய் பிறந்தபோழ்தே மருத்துவன் சொல்லென்ற போழ்தே பிணியுரைக்கும் - நல்லாக விடுகென்ற போழ்தே விடுக வரியான் ‘. . . . . தருகெனிற் றாயம் வகுத்து. (fő)