32
47.உப்பமைந் தற்றால் புலவி அதுசிறிது
மிக்கற்றால் நீள விடல்.
ஊடல் உணவுவகைகளுக்குச் சுவை தரும் உப்புப் போன்றது. அவ்வூடலை நாம் சிறிது அதிக நேரம் நீட்டித்தோமானால் உப்பு அதிகப்பட்டு உணவு சுவை கெட்டுப்போவது போல் இல்வாழ்வு பயனற்றதாகிவிடும்.
18. இம்மைப் பிறப்பில் பிரியலம் என்றேனாக்
கண்ணிறை நீர்கொண் டனள்.
இந்தப் பிறவியில் நான் உன்னை விட்டுப் பிரியவே மாட்டேன் என்றேன்.அப்படி யானால் மறு பிறவியில் பிரியக் கருதுகின்றீரோ என்று பிணங்கித் தன் கண்கள் நிறைய நீரைப் பெருக்கினாள்.
19. உள்ளினேன் என்றேன்மற்று என்மறந்தீர் என்றென்னைப்
புல்லாள் புலத்தக் கனள்.
பிரிந்திருந்த காலத்து நான் உன்னை நினைத்தேன்” என்றேன். அப்படியானால் 'என்னை நீர் மறந்தீரோ, மறந்தாலல்லவோ நினைத்திருக்க வேண்டும்’ என்று சொல்லி முன் தழுவுவதற்கு இருந்தஅவள்அதைவிட்டு ஊடல் கொள்ளலாயினாள்.
20. ஊடலில் தோற்றவர் வென்றார், அதுமன்னும்
கூடலில் காணப் படும்.
இன்பம் நுகர்தற்குரிய இருவருக்குள் நிகழும் ஊடலில் தோல்வியுற்றவரே வெற்றிபெற்றவராவர்.இவ்வுண்மைஅப்போது தெரியக்கூடாதிருப்பினும் அவர்கள் சேர்ந்து இன்புறும் போது நேரில் கண்கூடாக அவர்களே அறிந்து கொள்ளுதல் கூடும்.
21. ஊடுதல் காமத்திற்கு இன்பம் அதற்கின்பம்
கூடி முயங்கப் பெறின்.
காமத்திற்கு இன்பம் தருவது ஊடுதலே ஆகும்.அவ்வூடுதல் தீர்ந்தபின் காதலனும் காதலியும் கூடித் தழுவப் பெற்றால் அஃது அக்காதலை நிறைவேற்றும் இன்பம் ஆகும்.