இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.
4
எக்கோவின் காதல் ✽
கவியரசர் முடியரசன்
- சமூக விடுதலைக்கும்
- விதவைத் திருமணத்திற்கும்
- பாடாற்ற வேண்டும் என்று கவியரசர் முடியரசன் வலியுறுத்துகிறார்.
பகுத்தறிவு:-
கண்மூடி வழக்கமெல்லாம் மண்மூடிப் போகட்டும். விதி தன்னலக்காரர்களின் சதி, நம்பிக்கை இழந்தவர்களும் சுயநலக்காரர்களும் தான் கடவுளைத் துணைக்கு அழைப்பார்கள் என்று சிந்தையைத் துண்டும் வகையில் கவியரசர் முழக்கமிடுகிறார்.
முனைவர் இளவரசு:-
அஞ்சா நெஞ்சினர். நேர்மை உணர்வினர். தனித் தமிழ் இயக்க மறவர்களுக்கு வேராக இருப்பவர். வாழும் இளம் தலைமுறையினருக்கு வழிகாட்டும் ஒளி விளக்கு. இந்நூல் வெளிவர ஆக்கமும் ஊக்கமும் தந்த பெருமைக் குரியவர். அவருக்கு எம் நன்றி.
பாரி:-
தந்தையின் கொள்கைகளை தன் நெஞ்சில் ஏந்திய திருமகன். இந்நூலை வெளியிட தோன்றாத்துணையாக இருந்தவர். அவருக்கும் எம் நன்றி. தமிழ்க் குமுகாயம் இந்நூலைப் படித்துப் பயன்பெற வேண்டுகிறோம்.
தமிழ்மண் பதிப்பகத்தார்.