32
பல லட்சம் ஆண்டுகளுக்கு முன்னர், மனிதரின் மூதாதையர்களாகக் கருதப்படும் சில விலங்குகள் தோன்றினவென்றும்-சிலவகைக் குரங்குகளிலிருந்தது, பல்லாயிரக்கணக்கான ஆண்டுகளில் சிறிது சிறிதான அங்க அவயவ மாற்ற அமைப்புக்களுடன் மனித இனம் தோன்றி; சிறிது சிறிதாக வளர்ச்சியுற்று சரியான அங்க அமைப்புகளுடன் ஆதி மனிதன்-முழு மனிதனாக உருப் பெற்றதாக சில அறிஞர்கள் ஆராய்ச்சி செய்துள்ளனர்.
எப்படியோ முழுமனிதன் உருவாகி மனிதன், நாகரிக வளர்ச்சி பெற்று வளரத் துவங்கியபோது; அவனுக்கு வேண்டிய அனைத்தையுமே இந்த பூமி வஞ்சனையில்லாமல் வாரி வழங்கத் தயாராக உள்ளது என்பதை உணர்ந்து கொண்டான்.
பூமியில் உள்ள பெரும்பாலான பகுதி-அதாவது பூமியின் முக்கால் பாகத்திற்கு மேல் நீரால் சூழப்பட்டுள்ளது. கடலால் சூழப்பட்ட முக்கால் பகுதி போக மீதமுள்ள கால்பகுதி நிலப் பரப்பில்தான் பெரிய ஏழு கண்டங்களும்; பெரிய பெரிய நாடுகளும் உள்ளன. 1) ஆசியா, 2) ஆப்பிரிக்கா, 3) வட அமெரிக்கா, 4) தென் அமெரிக்கா, 5) அண்டார்டிகா, 6)ஆஸ்திரேலியா 7) ஐரேப்பா ஆகியவையே ஏழு கண்டங்களாகும்.