இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
பிறைமதி
கமாஸ்
ரூபகம்
எடுப்பு
பொன்னரிவாள் விண்ணில் தோன்றுதே ! அந்திப்
போது தந்த பிறை மதியாம் !
மேல் எடுப்பு
முன் மறைத்து மூடியிட்ட
மின் விளக்கைப் போலே வானில் !
அமைதி
ஒடிந்த யானைத் தந்தம் போலே !
உள்புதைந்த தட்டைப் போலே !
இடையில் கட்டும் ஒட்டி யாணம்
அவிழ்த் தெடுத்து வைத்தாப் போலே !
இரும்புச் சாலின் பட்டம் போலே !
இரண்டு கொம்பின் பொருத்தம் போலே
அரிந்த பரங்கிக் கீற்றைப் போலே !
அழகுப் பெண்ணின் நெற்றி போலே !
11