பக்கம்:தொடுவானம்.pdf/13

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

பிறைமதி



கமாஸ் ரூபகம்

எடுப்பு

பொன்னரிவாள் விண்ணில் தோன்றுதே ! அந்திப்

 போது தந்த பிறை மதியாம் !

மேல் எடுப்பு

 முன் மறைத்து மூடியிட்ட
 மின் விளக்கைப் போலே வானில் !

அமைதி

ஒடிந்த யானைத் தந்தம் போலே !
உள்புதைந்த தட்டைப் போலே !
இடையில் கட்டும் ஒட்டி யாணம்
அவிழ்த் தெடுத்து வைத்தாப் போலே !

இரும்புச் சாலின் பட்டம் போலே !
இரண்டு கொம்பின் பொருத்தம் போலே
அரிந்த பரங்கிக் கீற்றைப் போலே !
அழகுப் பெண்ணின் நெற்றி போலே !


11

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தொடுவானம்.pdf/13&oldid=1343794" இலிருந்து மீள்விக்கப்பட்டது