பக்கம்:தொடுவானம்.pdf/14

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

நிலவே வாழி!



காம்போதி ஆதி

எடுப்பு

நீலத் திரைகடல் மேலேஎழும்வெண்
ணிலவே ! நீ வாழியவே !

மேல் எடுப்பு

பாலை நிறைத்து வைத்தாய்
பரந்த கடல்வெளியில் !
பசு வெள்ளிப் பாய்விரித்துப்
பருக அழைக்கின்றாயோ ?

அமைதி

நாட்டில் பொருள் முடக்கும் நரிகளைப் போலன்றி
நல்லொளி விழியினால் மெல்ல நகை காட்டி
வாட்டும் துயரமோட்டி மனத்திலின் பத்தைக் கூட்டி
வள்ளலைப் போலென்றும் அள்ளி அள்ளி வழங்கும்,


12

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தொடுவானம்.pdf/14&oldid=1314665" இலிருந்து மீள்விக்கப்பட்டது