உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:கடற்கரையினிலே.pdf/46

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

44

கடற்கரையிலே


தலைமை சான்றாய் ! கடல் வளம் படைத்த உன்னை 'கடல் நாகை' என்று பாடினார் திருநாவுக்கரசர். இருமையும் தரும் ஈசனார் கோயில் இங்கு அருமையான காட்சி தருகின்றது. காரோணம் என்னும் திருக்கோயிலைக் கண்பெற்றவர் காணாதிருப்பரோ? .

"மன்னர் போற்றும் மணிநகரே ! இறைவன் அருளால் என் அரும்பெருந் தந்தையார் - இராஜராஜன் - நிலப்படையும் நீர்ப்படையும் பெருக்கினார் செருக்குற்ற மாற்றரசரை நொறுக்கினார்; கோதாவரி முதல் குமரி வரை ஆனை செலுத்தினார்: கடல் சூழ்ந்த பல நாடுகளில் புலிக்கொடியை நாட்டினார். சென்றவிடமெல்லாம் செரு வென்று ஜெயம் பெற்ற மன்னரை 'ஜெயங் கொண்டான்' என்று தமிழகம் சீராட்டி மகிழ்ந்தது. அவர் காட்டிய நெறியைக் கடைப்பிடித்து வாழ முயல்கின்றேன்; அம்மன்னர் அடிச்சுவடுபற்றி இந்நாட்டை ஆள ஆசைப்படுகின்றேன். அவர் காலத்தில் வெற்றிச்சுவை கண்ட தமிழ்ச்சேனை மேன்மேலும் வாகைமாலை சூட விரும்பிற்று; வடக்கே கங்கையாறளவும் சென்று மாற்றாரை வென்றது. பொங்கு கங்கையைப் பொற் குடத்தில் எடுத்து வந்தது; 'கங்கை கொண்டான்' என்னும் விருதுப் பெயரை எனக்குத் தந்தது.

"நலமார்ந்த நன்னகரே ! கங்கையின் நீரை என் தண்ட நாயகன் கொண்டு வந்தான். கோதாவரிக் கரையில் நான் அப்படைத் தலைவனை வரவேற்றேன்; கங்கையைக் கொண்டேன்; புதிதாகச் சோழநாட்டில் நான் கட்டிய ஏரியில் அந்நீரை உகுத்தேன் : 'சோழ கங்கம்' என்னும் பெயரையும் அதற்கு அளித்தேன்; கொள்ளிடத்திலிருந்து கால் பிடித்துக் காவிரியின் நீரை அந்த ஏரியிற்-

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கடற்கரையினிலே.pdf/46&oldid=1248474" இலிருந்து மீள்விக்கப்பட்டது