இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
மறிகடல்மேற் புதுப்பரிதி
வந்ததைப் பார் தோழி! -இன்பம்
தந்ததைப் பார் தோழி !
பொறிவண்டு பூப்புதரிற்
புதுப்பாட்டைப் பாடப்
பூத்த மலர் கொம்பிருந்தே
தென்றலுடன் ஆட!
நீரலைகள் கரைமுழக்க
வானம் மழை இழக்க
நிறச்சேவல் கொக்கரிக்கும்
வந்ததை அழைக்க !
ஊரெல்லாம் புதுப் பொங்கல்
உலேயினிலே தைப் பொங்கல!
உண்டாடும் கன்னியர்கள்
நடமாடும் திங்கள்!
கையெல்லாம் கனுக் கரும்பு !
வாயில் முல்லே அரும்பு !
கன்னியரின் நீள்புருவம்
தொடர்ந்து செல்லும் எறும்பு!
மெய்யெல்லாம் புதுமகிழ்ச்சி;
வெளியிற் குளிர்வீழ்ச்சி !
நாமடைவோம் பெருமகிழ்ச்சி
வீழ்ந்தகதிர் வாழ்த்தி !