பக்கம்:பொங்கற்பரிசு.pdf/27

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது



இன்பம் தந்த தை!

 றிகடல்மேற் புதுப்பரிதி
வந்ததைப் பார் தோழி! -இன்பம்
தந்ததைப் பார் தோழி !


பொறிவண்டு பூப்புதரிற்
புதுப்பாட்டைப் பாடப்
பூத்த மலர் கொம்பிருந்தே
தென்றலுடன் ஆட!


நீரலைகள் கரைமுழக்க
வானம் மழை இழக்க
நிறச்சேவல் கொக்கரிக்கும்
வந்ததை அழைக்க !


ஊரெல்லாம் புதுப் பொங்கல்
உலேயினிலே தைப் பொங்கல!
உண்டாடும் கன்னியர்கள்
நடமாடும் திங்கள்!


கையெல்லாம் கனுக் கரும்பு !
வாயில் முல்லே அரும்பு !
கன்னியரின் நீள்புருவம்
தொடர்ந்து செல்லும் எறும்பு!


மெய்யெல்லாம் புதுமகிழ்ச்சி;
வெளியிற் குளிர்வீழ்ச்சி !
நாமடைவோம் பெருமகிழ்ச்சி
வீழ்ந்தகதிர் வாழ்த்தி !

19
"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பொங்கற்பரிசு.pdf/27&oldid=1147827" இலிருந்து மீள்விக்கப்பட்டது