பக்கம்:உரைநடை வளர்ச்சி.pdf/64

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

உரைநடை வளர்ச்சி

62


தில் பதியவைக்கும். பழமையிலேயே புதுமை இருக்கிறது என்ற எண்ணத்தையும் இம்முறை வளர்க்கும். புதுமையை அறிய, அப்புதுமையைக் கண்டுபிடித்தவர்களுடைய மொழியையே பயன்படுத்தவேண்டும் அறிவியல் நடையில் அழகு தேவையில்லை. அறிவு துட்பத்தை விளக்கும் வல்லமை அந்த நடைக்கு இருக்கவேண்டும். பல இடையூறு களைத் தாண்டி, இந்த நடையை வளர்த்து வருகிற அறிவியல் விளக்க எழுத்தாளர்கள் பலர் தமிழில் எழுதுகிறார்கள். இவர்களுள் முன்னோடி, வயதில் முதிர்ந்தவரும் அறிவில் சிறந்த வரும் தமிழுக்குப் புதிய அறிவைக் கொணர்ந்தவருமான பெ.நா. அப்புசாமி அவர்கள். அவர் நூல்கள் எழுதுகிறார். பத்திரிகைகளில் அறிவியல் கட்டுரைகள் எழுதுகிறார். இது தவிர மிகப்பல அறிவியல் விஷயங்களைப் பற்றி எழுதி வைத் திருக்கிறார். இவர் அறிவியல் அறிவைப் பரப்புவதில் கொண்டிருக்கும் ஆர்வம், வெளியீடுகளின் மூலம் ஒரு சிறு பகுதியே திறைவேறுகிறது. இதனால் மனக்கசப்படைந்த அவர் ஒரு முறை, ஏ.வி. சுப்பிரமணிய ஐயர் என்ற ஆய்வாளரிடம் கூறினார்:

இந்தக் காகிதக் கட்டுகளைப் பாருங்கள், இவை நான் எழுதி வெளிவராத கட்டுரைகள். என்னை விறகால் எரிக்க வேண்டாம். இக்காகிதக் கட்டுரைகளைக் கொளுத்தியே எரிக்கலாம். போதுமான அளவு இல்லையா?

அறிவியல் தமிழ் நாட்டு மக்களிடையே பரவவில்லை. தமிழை வளர்க்க அமைக்கப்பட்ட அரசு நிறுவனங்கள் பாடப் புத்தகங்களை வெளியிடுவதை மட்டும் நோக்கமாகக் கொள்ளாமல் தமிழில் எழுதப் படிக்கத் தெரிந்தவர்களிடையே அறிவியல் அறிவைப் பரப்பவேண்டும். அரசே பல எளிய, புதுமையான நூல்களை வெளியிடவேண்டும். தனியார் வெளியிட்டு நிறுவனங்கள் சிற்சில முயற்சிகளை மேற்கொண்டுள்ளன. இம்முயற்சிகளால் அறிவியல் விளக்க நடை சிறிதளவு வளர்ச்சி பெற்றுள்ளது. சமூக அறிவியல் துறையும் தமிழுக்குப் புதிது. இத்துறை யில் மொழிபெயர்ப்பு நூல்களே பெரிதும் வெளியாகின்றன. தவிர சில பாட நூல்களும் வெளியிடப்பட்டுள்ளன. சமூக அறிவியலுக்கெனவே தன்னை அர்ப்பணித்துக் கொண்டுள்ளது 'ஆராய்ச்சி'. இதில் வெளிவந்த கட்டுரைகள் சில நூல்களாக வெளிவந்துள்ளன. தமிழ் நடை புதிதாக இத்துறையில் நுழைந்துள்ளது. பலர் இத்துறைகளில் நூல்கள் எழுதினால்தான் பாதை செம்மையுறும்.