பக்கம்:தைப்பாவாய்-மொழி, பண்பாடு சார்ந்த கவிதைகள்.pdf/15

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

5



ஒற்றைப் பெண்மான்!


தவத்தினால் மெலிந்த மேனி!
தரைபுரளும் அழுக்கு டைகள்!
அவள் துண்பம் கணிணர் எதுவும்
அணுகிடா இன்பம் ஒன்றே
உவப்புடன் துய்க்க வந்தாள்,
உலராக துன்பக் கடலுள்
துவண்டனள்! அந்நே ரத்தும்
சுடர் முகத்தால் திசைகள் மின்னும்!

மைப்புகைசூழ் விளக்கே போல;
வளர்பிறையின் துளிரைப் போலக்
கைப்பொருள் குறைந்தாற் போலக்
கலக்கமுறா ஞானம் போல
பொய்ப்பழி தனினால் குனிந்தப்
புகழினைப் போல; மேலாம்
மெய்ப்பொருள் தொடர்பே இல்லா
வித்தையைப் போல நைந்தாள்!