பக்கம்:ஓ மனிதா.pdf/112

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

குயில் கேட்கிறது

111

போலீசாரின் தடியடிக்கோ, துப்பாக்கி குண்டுக்கோ இரையாக்கி செத்து விழுந்த அவர்கள் சடலங்களின் மேல் அவர்களுடைய மனைவி, மக்கள், உற்றார் உறவினர்கள் விழுந்து அழுவதற்கு முன்னால், நீங்கள் விழுந்து அழுது அடுத்த நாளே அவர்களைத் ‘தியாகி’களாக்கி நிதி திரட்டி, அந்த நிதியில் கட்சியை வளர்ப்பதோடு உங்களையும் வளர்த்துக் கொள்கிறீர்கள்.

அந்தத் தொண்டர்களிலேயே சிலரைக் ‘குண்டர்’ களாக்கி, பஸ்ஸையும், ரயிலையும் ‘பெட்ரோல்’ ஊற்றிக் கொளுத்தி, ‘எங்கள் போராட்டத்தில் இப்போது தான் சூடு பிடிக்கத் தொடங்கியிருக்கிறது’ என்று வேறு சொல்லி, அந்தச் சூட்டில் நீங்கள் படுகுஷியாகக் ‘குளிர்’ காய்கிறீர்கள்.

நல்ல வேளையாக உங்கள் ‘பிறந்த நாள் விழா’க்களை வருடந் தவறாமல் கொண்டாடும் அளவுக்கு மக்கள் இன்னும் புத்திசாலிகளாகவில்லை என்பது மட்டும் உங்களுக்கு எப்படியோ தெரிந்திருக்கிறது. அதனால் அந்த விழாக்களை உங்களுக்கு நீங்களே கொண்டாடிக் கொள்கிறீர்கள். அல்லது, உங்களுக்கு வேண்டியவர்களை, உங்களால் பெற முடியாத பேறுகளையெல்லாம் ஊரான் வீட்டுச் செலவில் பெற்று வருபவர்களை விட்டுக் கொண்டாட வைக்கிறீர்கள். அத்தகைய விழாக்களுக்கு நீங்களும் போகக் கூச்சப்படுவதுமில்லை, வெட்கப்படுவதுமில்லை. எல்லாருக்கும் முன்னால் போய் மேடையில் உட்கார்ந்து விடுகிறீர்கள். ‘காக்கா, காக்கா! இவ்வளவு அழகாய் இருக்கிறாயே, ஒரு பாட்டு பாடேன்’ என்பது போல அங்கே மனித உருவில் உள்ள ‘குள்ளநரிகள்’ உங்களைப் பாராட்டிப் பேசுவதை காது குளிரக் கேட்கிறீர்கள், அவ்வளவை–

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:ஓ_மனிதா.pdf/112&oldid=1371323" இலிருந்து மீள்விக்கப்பட்டது