பக்கம்:மார்ட்டின் லூதர் கிங்.pdf/15

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

சி. பி. சிற்றரசு

9


னாகத் தயார் செய்துகொள்ள முற்பட்டான். அந்த அடிப்படையில் அவன் கொண்ட முடிவு மதத்தைப் பற்றி (Theology) படிக்க வேண்டுமென்பது. அந்தத் துறையில் அன்று ஜர்மனியில் இருந்த பெயர் போன எர்பர்ட் ( Erfurt) என்ற கல்லூரியில் படித்து M. A. பட்டம் பெற்றன் தன் 18-வது வயதில். செடியின் வளர்ச்சி நிலத்தின் சத்தைக் காட்டுவதைப்போல் 18-வது வயதிலேயே M. A., படித்து முடித்த அவன் அறிவை அளந்துகாட்டி விட்டது. ஆனால் இவன் தந்தை வருவாயை வேண்டி இவனை வக்கீலாக்க வேண்டுமென்று விரும்பினர். ஆனால் மகனின் முடிவு வேறாயிருந்து அதன்படியே முடிந்துவிட்டது. ஒரு சமயம் இவன் வக்கீலாக இருந்திருந்தால் பொய்க்குப் புகலிடம் எங்கே என்று சட்ட புத்தகத்தைப் புரட்டுவதிலேயே நின்றுவிட்டிருக்கும். அல்லது தன்னால் வெல்ல முடியாக வழக்கின் சொந்தக்காரனைப் பார்த்து "நான் என்னப்பா செய்யட்டும், நான் சொல்லிக் கொடுத்ததைப்போல நீ நீதி மன்றத்தில் சொல்லவில்லை. உண்மையை உளறிக் கொட்டிவிட்டாய், உண்மை சொல்ல வேண்டியதுதான். அதை நான் தவறென்று சொல்லவில்லை. ஆனால் அந்த பாழாய்ப்போன உண்மையைக் கோர்ட்டில் சொல்லிவிட்டாயே என்றுதான் எனக்கு வருத்தம். நாங்கள்தான் என்ன செய்வோம். சட்டங்கள் தான் என்ன செய்யமுடியும். சட்டம் ஓர் தடாகம். நீந்தத் தெரிந்தவன் அதில் தப்பித்துக்கொள்வான். தெரியாதவன் அதில் விழுந்து சாகவேண்டி-