சி. பி. சிற்றரசு
41
னாகப் போகின்றான் என்ற செய்தி தலையில் இடி விழுந்ததைப் போலாய்விட்டது. மதபோதை என்பது அன்று சீனத்தின் சீரழிவுக்குக் காரணமாயிருக்கும் அபினிப். போதையைவிட மகா மோசமானது என்றுணர்ந்த தந்தை, உடனே சன்யாட் சன்னை தன்னிடம் அனுப்பிவிடும்படி கட்டளையிட்டு விட்டார். அதன் படி இந்த வருங்கால கிருஸ்தவ எண்ணத்தின் பிரதிநிதி தன் தந்தையின் கட்டளைப்படி தாயகம், திரும்பிவிட்டார்.
பிறகு காண்டன் (Kantan) நகரத்திலிருந்த. டாக்டர். கெர் என்பவரிடம் வேலை செய்து கொண்டிருந்தார். அவரிடம் வேலை பார்த்துக்கொண்டிருக்கும்போதுதான் தந்தையின் ஏற்பாட்டின்படி லு-ஷு என்ற பெண்ணைத் திருமணம் செய்துகொண்டார். பிறகு ஹாங்காங் (Hongkong) தீவில் புதியதாக ஆரம்பிக்கப்பட்ட வைத்தியக் கல்லூரியில் சேர்த்து படித்தார். அந்தக் கல்லூரியின் தலைவர் டாக்டர் ஜேம்ஸ்காட்லி என்பவர் சன்னை அன்பாக நடத்தினார். அவரே பிற்காலத்தில் சன்-யாட்-சன்னுக்கு ஏற்படும் பலவித அரசியல் அபாயங்களில் உதவியும் செய்கிறார்.
சன்-யாட்-சன் 1892-ல் டாக்டர் பட்டம். பெற்றுக்கொண்டு மாக்கோ என்ற இடத்தில் தொழில் நடத்திக்கொண்டிருக்கின்றார். இரண சிகிச்சையில் கைதேர்ந்தவரென பெயரெடுக்கின்றார். இப்போதுதான் நாட்டின் படுமோசமான நிலையை உணர்கிறார். "அண்டை நாடான ஜப்பான் மேல்நாட்டைப்